வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நீயா நானா போட்டியில் 2 பிக்பாஸ் போட்டியாளர்கள்.. அசீமுக்கு ரத்த சொந்தம் செய்யும் துரோகம்

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இதனாலேயே இப்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த சீசனை பொருத்தவரை பைனலுக்கு தேர்வாகியுள்ள போட்டியாளர்களில் விக்ரமன், அசீம், சிவின் ஆகிய மூவருக்கும் ஏராளமான ஆதரவு கிடைத்து வருகிறது. இவர்களில் ஒருவர்தான் இந்த பட்டத்தை வெல்வார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது விக்ரமனுக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருவது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது விக்ரமனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏனென்றால் விக்ரமன் அவருடைய கட்சியைச் சார்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நிலையில் கட்சியின் தலைவரே இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: தனி ஒருவனாக கெத்து காட்டும் போட்டியாளர்.. பிக்பாஸ் ஓட்டிங் இறுதி நாள், டைட்டில் வின்னர் யார்?

அதைத்தொடர்ந்து அறம் வெல்லும் என்ற ஹாஷ்டாக்கும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் திருமுருகன் காந்தி, பிக் பாஸ் 2 வின்னர் ரித்திகா ஆகியோர் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக அசீமின் ரத்த சொந்தமான ஒரு உறவும் விக்ரமனுக்கு ஆதரவு கொடுத்திருப்பது தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது அசிமின் தாய் மாமா ஆளூர் ஷா நவாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்ரமன் வெல்ல வேண்டும் என்ற ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

மேலும் அவர்கள் இருவரும் இருக்கும் போட்டோவை பதிவிட்டு கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம். தலைவர் திருமாவளவனின் வரிகளுக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: கடைசி வாரத்தில் துரத்தி விடப்பட்ட போட்டியாளர்.. சாதுரியமாக காய் நகர்த்திய அமுதவாணன்

ஏனென்றால் இப்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அசீமுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உறவினரே விக்ரமனுக்கு ஆதரவு கொடுத்திருப்பது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அசீம் தான் இந்த பட்டத்தை தட்டிச் செல்வார் என்று ரசிகர்கள் உரக்க குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது அதாவது இந்த சீசனில் அசிமுக்கு மட்டும்தான் இதுவரை இல்லாத அளவுக்கு பிக் பாஸ் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் அதையெல்லாம் தூசி தட்டுவது போல் தட்டி கெத்தாக நிற்கும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் விக்ரமனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நீயா நானா போட்டியில் இவர்கள் இருவரில் யார் இந்த டைட்டிலை சொந்தமாக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also read: மதத்தை வைத்து அசிங்கப்படுத்திடீங்க .. கொந்தளித்த பிக் பாஸ் நடிகை

 

Trending News