திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லா பெரும் தலைகளுடன் நடித்த அப்பாஸ்.. 5 படங்களிலும் ஆடியன்சை அள்ளிய சாக்லேட் பாய்

Actor Abbass: தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட ஹீரோ நடிகர் அப்பாஸ். முக்கால்வாசி இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அனைத்தும் காதல் படங்களாகவும், இளைஞர்களை வசியம் செய்யும் அளவிற்கு இவருடைய நடிப்பு இருக்கும். அப்படிப்பட்ட இவர் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட படங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.

ரஜினி: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன்,ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், அப்பாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினியை பழி வாங்குவதற்காக இவருடைய மகளை காதலிப்பதாக அப்பாஸ் கேரக்டர் அமைந்திருக்கும். அத்துடன் ரஜினியின் மருமகனாக இப்படத்தில் நடித்து இவருக்கான கதாபாத்திரத்தை சரிவர நடித்துக் காட்டி இருப்பார். இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.

Also read: ரஜினியின் 170 ஆவது படத்தின் டைட்டில் இதோ.. நிறைவேற போகும் சூப்பர் ஸ்டாரின் கனவு

பம்மல் கே சம்பந்தம்: மௌலி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பம்மல் கே சம்பந்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சிம்ரன், அப்பாஸ், சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அப்பாஸ், ஆனந்த் என்ற கேரக்டரில் கமலின் தம்பியாக நடித்திருப்பார். அத்துடன் அப்பாஸ் சினேகாவை காதலித்து திருமணம் செய்த பின் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்யும் விதமாக கமல் அனைத்து உதவிகளும் செய்து வருவார். இப்படம் ஒரு கலாட்டாவான திரைப்படமாகவும், விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

மம்முட்டி: என் லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் மம்முட்டியின் மூன்றாவது தம்பியாக கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்திருக்கிறார். இப்படத்தில் அப்பாஸுக்கும் சினேகாக்கும் காதல் ஏற்பட்டு இருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று, அந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது.

Also read: அஜித் எடுக்கும் புதிய முடிவு.. நடப்பதை பார்த்து அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன!

அஜித்: ராஜீவ் மேனன் இயக்கத்தில் 2000ம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யாராய், அப்பாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் காதலனாக நடித்து அனைவரது கவனத்தையும் இவர் பக்கம் திரும்பும் வகையில் நடிப்பை பிரமாதமாக காட்டி இருப்பார். இந்த ஒரு படத்திலேயே இரண்டு ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்து விட்டார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

மாதவன்: கௌதம் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், ரீமாசென், அப்பாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் அப்பாஸ், ரீமா சென்னின் உண்மையான காதலனாக இவருடைய கேரக்டர் அமைந்திருக்கும். ஆனால் சில குளறுபடிகளால் இவருடைய காதல் கைகூடாமல் நிராசையாக போய்விடும். இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த படமாக தற்போது வரை இடம் பிடித்திருக்கிறது.

Also read: மாதவன் சினிமாவை வெறுக்க காரணமாய் அமைந்த 5 படங்கள்.. நடிப்பே வேண்டாம் என துபாய் பறந்த மேடி

Trending News