வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியளவில் 2022 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த 100 பாடல்கள்.. மாஸ் காட்டிய விஜய், கமல்

இந்திய அளவில் 2022 ஆம் ஆண்டில் வெளியான டாப் 100 பாடல்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் தமிழ் சினிமாவின் இரண்டு பாடல்கள் முக்கிய இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது. இந்த இரண்டு பாடல்களும் அனிருத் இசை அமைத்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு படங்களுக்கு இசை அமைக்கிறார் என மற்ற இசையமைப்பாளர்கள் பொறாமைப்படும் அளவிற்கு சுற்றி சுற்றி வேலை பார்க்கிறார் அனிருத்.

Also Read: அனிருத் வலையில் சிக்கிய 5 நடிகைகள்.. 45 வயது ஆன்ட்டியிடம் செய்த லீலை

மேலும் அனிருத்தின் கால்ஷீட்டுக்காக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் காத்திருக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் இவருடைய மவுசு கூடும் வகையில் இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் இந்திய அளவில் டாப் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் டாப் 100 சிறந்த பாடல்கள் லிஸ்டில் 28-வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல் ஜொனிதா காந்தியுடன் இணைந்தும் பாடி, உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: ரசிகர்களை ஏமாற்றும் அஜித், அனிருத் கூட்டணி.. இன்னும் எத்தனை நாளு இப்படி உருட்ட போறீங்க!

இந்தப் பாடல் மட்டுமல்ல, இவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தின் டைட்டில் ட்ராக் பாடலுக்கும் இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். இந்த பாடலும் டாப் 100 லிஸ்டில் 58-வது இடத்தை பெற்று அனிருத்தை உலக அளவில் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் அனிருத் இசையமைத்த இரண்டு பாடல்கள் இந்திய அளவில் முக்கிய இடத்தை பெற்றிருப்பது கோலிவுட்டிற்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அனிருத் உலக அளவில் மாஸ் காட்டியிருப்பதை வைத்து சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: அனிருத்துக்கு சவால்விடும் ஏ ஆர் ரகுமான்.. இதுலாம் எனக்கு ஜுஜுபி மாதிரி

Trending News