Selvaraghavan : அன்பே சிவன் போன்ற சில படங்கள் தமிழ் சினிமாவில் காலம் தாழ்த்தப்பட்டு கொண்டாடப்படும். அந்த வகையில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படமும் ஒன்று.
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்திருந்தார். தியேட்டரில் வெளியான போது வரவேற்பு கிடைக்காத நிலையில் அதன் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதனால் செல்வராகவன் நொந்து போய்விட்டார். ஆனால் எப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு நேர்காணலில் செல்வராகவன் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது.?
அதாவது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க வைக்க பயிற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அதை மிக விரைவில் வெளியில் சொன்னது தான் நாங்கள் செய்த தவறு. அதோடு கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் கிடையாது.
மேலும் இந்த படம் எடுப்பது அவ்வளவு எளிது கிடையாது. ஏனென்றால் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை எடுக்க தயாரிப்பாளர் வேண்டும். மேலும் இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஒரு வருடம் டேட் கொடுக்க வேண்டும்.
இதெல்லாம் அமைந்தால் தான் ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் கதை தயாராகத்தான் இருக்கிறது என்று செல்வராகவன் கூறுகிறார்.