திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

உச்சநடிகரை நம்பி மோசம் போயிட்டோமே.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பு நிறுவனம்

Gossip: டாப் நடிகர்களுக்கு என்று சினிமாவில் ஒரு மார்க்கெட் இருந்து வருகிறது. படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ ஆனால் போட்ட பட்ஜெட்டை எடுத்து விடலாம். இவர்களுக்கு கண்டிப்பாக மீண்டும் கேரண்டி கொடுக்கலாம் என தயாரிப்பு நிறுவனங்கள் நம்புகின்றனர்.

அதனால் பெரிய நடிகர்கள் 200 கோடி சம்பளம் கேட்டாலும் பணத்தைக் கொட்டிக் கொடுத்து அவர்களின் படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பெரிய நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பு நிறுவனம் டாப் ஹீரோ ஒருவரின் படத்தை பல வருடங்களாக உருட்டி வந்தது.

இந்த படம் மட்டும் ரிலீஸ் ஆனால் இதுவரை பட்ட கடனை எல்லாம் மொத்தமாக அடைத்து விடலாம் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தது. ஆனால் இருந்ததும் போச்சு நொள்ள கண்ணா என்ற நிலைமை தான் இப்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

உச்சநடிகரை நம்பி ஏமாந்துபோன தயாரிப்பு நிறுவனம்

அதாவது போட்ட பட்ஜெட்டில் பாதி கூட இந்த படத்தால் எடுக்க முடியவில்லை. ஆகையால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். டாப் நடிகருக்கு கிடைத்த சம்பளம் போதும் என்று அடுத்த படத்தில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமோ இந்த படத்திற்கு வாங்கிய வட்டி முதலை எப்படி கட்டுவது என தலையை பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பெரிய நிறுவனம் என்பதால் இன்னும் இரண்டு மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்த படத்தில் வரும் லாபத்தை வைத்து அந்த படங்களையும் எடுத்து முடித்திடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் நினைத்தது. ஆனால் இப்போது அந்த படங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் பாதியிலேயே நிற்கின்றது. இதிலிருந்து எப்படி தான் மீண்டு வர போகிறது.

Trending News