வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஒரு மொக்க படத்தால் திண்டாடும் ஜெயம் ரவி.. பொன்னியின் செல்வன் மரண ஹிட்டடித்தும் பிரயோஜனம் இல்லை

பொன்னியின் செல்வனுக்கு பிறகு ஜெயம் ரவியின் மார்பில் ஜெட் வேகத்தில் எகிறியது. எந்த வலைதளத்தை பார்த்தாலும் ஜெயம்ரவி பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறார். எல்லா விளம்பரத்தில் ஜெயம்ரவி, ஏர்போர்ட்டில் ஜெயம்ரவி என்று மனிதன் புயல் போல் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

மணிரத்னம், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து தரமான ஹிட் கொடுத்து, ஜெயம் ரவி , கார்த்தி ,விக்ரம் போன்றவர்களை மேலே தூக்கி விட்டு விட்டார் .. இப்பொழுது மூன்று பேருமே படு பிசியாக படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஜெயம்ரவி இப்பொழுது வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே அகிலன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்பொழுது இந்த படத்திற்கு தான் பெரும் தலைவலியாக இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து படு மொக்கையான படம் பூமி. இதை காரணம் காட்டி இந்த படத்தை வாங்குவதற்கு மறுக்கின்றனர். இதனால் இந்தப் படம் விலை போகாமல் ஜெயம் ரவிக்கு தலைவலி கொடுத்து வருகிறது.

பூமி படத்தின் கதையை தேவையில்லாமல் கமிட்டாகி நடித்து விட்டார் ஜெயம் ரவி. அந்த படம் அவருக்கு பெரிய பிளாப் ஆக அமைந்தது. இதனால் எங்கே அகிலன் படமும் பூமி படம் போல் ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தி விடுமோ என்று இந்த படத்தை வினியோகஸ்தர்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

உங்களை நம்பி நாங்கள் தலையில் துண்டை போட முடியாது என இந்த படத்தை நிராகரித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் ஆல் ஜெயம்ரவி மார்க்கெட் படு உச்சத்துக்குச் சென்றாலும்  அந்த பூமி படத்தால் அவர் இன்றுவரை தலை வலியை அனுபவித்து வருகிறார்.

Trending News