சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

சந்தியா ராகம் சீரியலில் கார்த்திக்கிடம் சிக்கிக்கொண்ட மாயா.. ஆத்திரத்தில் ஜானகி எடுத்த முடிவு

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், தனத்திற்கு தொடர்ந்து கார்த்திக் டார்ச்சர் கொடுத்து வருவதால் அதற்கு ஒரேடியாக முடிவு கட்ட வேண்டும் என்று மாயா பிளான் பண்ணினார். அதன்படி கார்த்திக் வர சொன்ன இடத்திற்கு தனம் மாதிரியே மாயா கிளம்பி அந்த இடத்திற்கு போய்விட்டார்.

அங்கே போனதும் கார்த்திக்கிடம் இருக்கும் வீடியோவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மாயா பிளான் பண்ணி அந்த போனை கார்த்திக்கிடம் கேட்டார். ஆனால் கார்த்திக் மாயாவிடம் போன் கொடுப்பதற்கு முன் அந்த வீடியோவை லேப்டாப்பில் அனுப்பி வைத்துவிட்டு ஃபோனை கொடுத்து விட்டார்.

போனை பார்த்ததும் மாயா முகத்தில் மூடி போட்டிருந்த முக்காடு கீழே விழுந்து விட்டது. அதன் பிறகு கார்த்திக், இது தனம் இல்லை மாயா தான் என்று கண்டுபிடித்து விட்டார். கார்த்திக் போதையில் இருந்ததாலும் மாயாவை விடாமல் துன்புறுத்த வேண்டும் என்று துணிந்து விட்டார்.

ஆனால் கார்த்திக் இடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் இன்று மாயா போராடிய நிலையில் தலையில் அடிபட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார். இந்த சூழ்நிலையை கார்த்திக் அவருக்கு சாதகமாக பயன்படுத்தி தப்பு பண்ணுவதற்கு முயற்சி எடுக்க ஆரம்பித்து விட்டார்.

இதற்கு இடையில் கார்த்திகை தேடி போன மாயா இன்னும் வரவில்லை என்று ஜானகி வீட்டில் இருந்து கிளம்பி கார்த்திக் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறார். அப்பொழுது மாயாவிடம் தப்பாக நடக்க முயற்சிக்கும் கார்த்திகை ஜானகி பார்த்து விடுகிறார். உடனே ஆக்ரோஷப்பட்ட ஜானகி, கார்த்திக்கிடமிருந்து மாயாவை காப்பாற்ற வேண்டும் என்று விபரீதமாக கார்த்திக் மண்டையில் அடித்து விடுவார்.

இதனால் கார்த்திக் உயிருக்கு போராடும் நிலையில் போய் விடுவார். ஆனாலும் அந்த இடத்தில் இருந்து மாயாவை ஜானகி கூட்டிட்டு வந்து விடுவார். இதன் பிறகு கார்த்திக்கு என்ன ஆகப்போகிறது ஜானகி மீது பழி விழுமா? கார்த்திக்கின் உண்மையான குணம் தனத்திற்கு புரிய வருமா? என்பது அடுத்தடுத்த கதைகளுக்கு உடன் நகரப் போகிறது.

Trending News