வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சமீபத்தில் வசூலை வாரி இறைக்கும் 3 மலையாள படங்கள்.. தூண்டிலை போட்டு சுறா பிடித்த மம்முட்டி படம்

3 Malayalam movies collection: படங்களை பொழுதுபோக்குக்காக பார்த்த காலங்கள் மாறி படம் பார்ப்பது மட்டுமே பொழுதுபோக்கு என்ற நிலைமைக்கு வந்து விட்டது. அதனால் எந்த மொழிகளில் இருந்து படங்கள் வந்தாலும் கதை நன்றாக இருந்தால் அதை வரவேற்கும் அளவிற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கமுக்கமாக மலையாள படங்கள் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிரேமாலு: கிரிஷ் இயக்கத்தில் கடந்த மாதம் பிரேமாலு திரைப்படம் வெளிவந்தது. இதில் நஸ்லென் கே. கஃபூர், மம்தா பைஜூ, ஷியாம் மோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நகைச்சுவை மற்றும் காதல் சம்பந்தப்பட்ட கதையாக வந்து மக்களை அதிகமாகவே ஈர்த்து விட்டது அத்துடன் இப்படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 75 கோடி வரை லாபத்தை பெற்று தற்போது வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

பிரமயுகம்: இயக்குனர் ராகுல் சதாசிவனின் இயக்கத்தில் பிரம்மயுகம் திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்தது. இதில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கருப்பு வெள்ளை திரை அனுபவத்தை வைத்து வெளிவந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டதட்ட 27 கோடியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் லாபம் 70 கோடி லாபத்தை பெற்றது.

Also read: 70 வயதிலேயேயும் மலையாள சினிமாவை தூக்கி நிறுத்திய மம்முட்டியின் தரமான 7 ஹிட் படங்கள்.. மிஸ் பண்ணாம பாத்துருங்க!

மஞ்சுமல் பாய்ஸ்: சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் கடந்த வாரம் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 11 நண்பர்கள் சேர்ந்து ஜாலியாக ஓணம் விடுமுறையை கொண்டாடும் விதமாக கொடைக்கானலுக்கு போயிட்டு தடை செய்யப்பட்ட குணா குகைக்குள் சுற்றி பார்க்கும் பொழுது மாட்டிக்கொண்டு தவிக்கும் விதமாக கதை விறுவிறுப்பாக நகரும். இப்படம் 17 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 65 கோடி லாபத்தை சம்பாதித்து தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டு வருகிறது.

இப்படி சமீபத்தில் வெளிவந்த மலையாள படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வசளவில் லாபத்தை சம்பாதித்து விட்டது. அதில் இன்னும் ஒரு சில படங்கள் திரையரங்களில் ஓடிக்கொண்டு ஒவ்வொரு நாளும் லாபத்தை ஈட்டி வருகிறது.

Also read: மணிரத்தினம் கையில் ஒப்படைத்தும் 5 நடிகர்களுக்கு பலிக்காத பச்சா.. மம்முட்டிக்காக எடுத்த படம்

Trending News