Ajith : அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இப்போது அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது
அதாவது வேதாளம், விசுவாசம் போன்ற படங்களில் நடித்த சமயத்தில் அஜித் கொஞ்சம் பருமனாக இருந்தார். அதன் பிறகு துணிவு படத்தில் சற்று உடல் எடை குறைத்த நிலையில் விடாமுயற்சி படத்திலும் ஸ்லிம்மாக காணப்பட்டார்.
ஆனால் இப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் மெழுகு சிலை போல மிகுந்த மெல்லிய தேகத்துடன் அஜித்தின் புகைப்படம் வெளியாகி இருந்தது.
மெலிந்து போன அஜித்தின் புகைப்படம்

இப்போது கிளீன் ஷேவில், வைட் ஷாட்டில் அஜித்தின் ரீசென்ட் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. நாளுக்கு நாள் மெலிந்து போகும் அஜித்தின் புகைப்படம் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்ந்திருக்கிறது.
தற்போது அஜித்துக்கு 53 வயதாகும் நிலையில் வயதான தோற்றம் வந்து விட்டதாக கமெண்டுகள் வருகிறது. விஜய் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது உடம்பை எப்பொழுதுமே ஸ்லிம்மாக வைத்து வருகிறார்.
ஆனால் அஜித் அப்போதிலிருந்து உடல் எடை ஏற்றுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறார். அதற்கு காரணம் அவர் எப்படி நடித்தாலும் அவரது ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர்.
அவரது உடல் நலத்தில் இப்போது கவனம் செலுத்த வேண்டும் என்ற அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.