திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

AR.ரஹ்மான் குறித்த அவதூறை நிரூபித்தால் கோடியில் பரிசு.. உயிர் நண்பன் விட்ட சவால்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் பிஸியாக இருப்பவர். தற்போது காதலிக்க நேரமில்லை, ஜெனி, சூர்யா 45 ஆகிய படங்களுக்கும், பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா அவரை பிரிவதாக வலைதளப் பக்கத்தில் பிரிவதாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானும் தன் சமூக வலைதளத்தில் ஹேஸ்டேக்குடன் இதுகுறித்து உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

நாடு முழுவதும் அனைத்து மீடியாக்களும் இதுகுறித்து செய்திகள் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதியர் பிரிவதாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன் கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார்.

இதையடுத்து, பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்தன. யூடியூப்பிலும் மீடியாவிலும், ஊடகங்களில் இதுகுறித்து பல்வேறு வதந்திகள் எழுந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து, அவர், தன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, சாய்ரா பானு, ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே சிறந்த மனிதர் என ஆடியோ வெளியிட்டிருந்தார். மோகினி டேவும் ஏ.ஆர்.ரஹ்மான் தன் தந்தையைப் போன்றவும் என வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் நண்பர் கசாலி கூறியதாவது:

இந்த நிலையில், இசையமைப்பாளர் ரஹ்மானின் குடும்ப நண்பரும், சென்னை சேப்பாக்கம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், பாமக துணைத்தலைவருமான கசாலி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், நானும் ரஹ்மானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள்.

அவரது தனி மனித ஒழுக்கத்தை நன்கு அறிந்தவன் நான். அவரது மனைவியின் பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இந்தியாழின் புகழ், தமிழின் புகழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர் அவர். அவர் மீது அவதூறு பரப்புவ்து மனவலியை கொடுக்கிறாது. நான் யூடியூப்பர்களுக்கு சவால் விடுகிறேன்.

அவர் மீதான அவதூறுக்கு ஆதாரத்தை எடுத்துக் காட்டிச் சொல்லுங்கள் அப்படி ஆதாரம் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளார். அவரது புகழை உடைக்காதீர்கள், அவர் அதற்கெல்லாம் உடைந்துபோகும் ஆள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Trending News