தூங்கினாள் துரத்திவிடும் நிறுவனங்கள் நமக்கு தெரியும். ஆனால் தூங்குவதற்கு மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் கொடுக்கும் நிறுவனம் தற்போது பிரபலமாகி வருகிறது.
ஸ்டார் ஹோட்டலில் படுக்கை மற்றும் தலையணைகளை தயாரிக்கும் Delay Love Luxury, Wake Fit நிறுவனங்கள் படுக்கையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு வேலை ஆட்களை தேர்வு செய்துள்ளனர்.
அதற்கு சம்பளம் மட்டும் 1.4 லட்சம் வரை தரப்படுகிறதாம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும், மகிழ்ச்சியான தூக்கத்தை கொடுப்பதற்காக இந்த நிறுவனம் இப்படி ஒரு முயற்சியில் இறங்கி உள்ளதாம்.
படுத்த 10 அல்லது 20 நிமிடங்களில் தூங்கி விட வேண்டும், எந்த ஒரு மொபைல் போன் அழைப்புகள் வந்தாலும் எடுக்க கூடாது. இது போன்ற ஒரு சில கட்டளைகளை போடப்பட்டுள்ளது.
இதில் வேலை பார்க்கும் நபர்களுக்கு தனியாக அறை, உணவு மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
தூங்கி எழுந்த பின் எப்படி இருந்தது என்ற அனுபவத்தை நிர்வாகத்திடம் கருத்துக்களை பதிவிட பின்னே மெத்தையின் வடிவமைப்பை மாற்றுகின்றனர். இதுபோன்ற கம்பெனிகளை தற்போது உள்ள இளைஞர்கள் வலை வீசி தேடுகின்றனர்.