தமிழ் சினிமாவில் வெளிநாட்டு கதைகளையும், காட்சிகளையும், இசையையும் ஏன் போஸ்டர் லுக்களையும் கூட திருடி நம்ம ஆட்கள் வைத்துவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெகு ஆண்டுகளாய் இருந்து வந்தாலும் இங்கிருந்து ரீமேக் செய்யப்பட்டு மற்ற மொழிகளில் ஹிட் அடித்த படங்களும் அதிகம் உள்ளன. அவற்றில் முக்கியமாக பாலிவுட்டில் இங்கிருந்து ரீமேக் செய்யப்பட்ட டாப் 10 படங்களை வாங்க பார்க்கலாம்.
10.Sooryavansham – Suryavamsam
1997ல் சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் சூர்யவம்சம். அதன் ஹிந்தி ரீமேக்கில் (Sooryavansham) பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்த படம் 1999ல் வெளியானது. தேவயானி வேடத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யாவும், ராதிகா வேடத்தில் ஜெயசுதாவும் நடித்திருந்தனர்.
9. Biwi No.1 – Sathileelavathy
1995ல் கமல்ஹாசன் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் சதிலீலாவதி. இதன் ஹிந்தி ரீமேக்கில் கமல் வேடத்தில் சல்மான் கானும், அவருக்கு ஜோடியாக கரிஷ்மா கபூரும் நடித்திருந்தனர். ஹீரா வேடத்தில் சுஷ்மிதா சென், கோவை சரளா வேடத்தில் தபு நடித்திருந்தனர். இப்படம் 1999ல் வெளியானது.
8. Tere Naam – Sethu
1999ல் வெளிவந்து சியான் விக்ரம் என்ற பெயரை நடிகர் விக்ரமுக்கு வாங்கித்தந்த மெஹா ஹிட் திரைப்படம் சேது. இதன் ஹிந்தி பதிப்பில் வழக்கம் போல் நம் ரீமேக் நாயகன் சல்மான் கான் நடித்திருந்தார். படத்தின் ஹீரோயினாக பூமிகா நடித்தார். இப்படம் 2003ல் வெளியானது.
7. Force – Kaakha Kaakha
சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த போலிஸ் வாழ்க்கையின் புதிய பரிணாமத்தை காட்டிய திரைப்படம் காக்க காக்க. இதன் ஹிந்தி பதிப்பில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா, வித்யுத் நடித்திருந்தனர். படம் 2011ல் வெளியானது.
6. Ghajini – Gajini
பெயர் மாற்றம் செய்யப்படாமல் கஜினி என்ற பெயரிலேயே மறுவுருவாக்கம் செய்ப்பட்ட பாலிவுட் திரைப்படம் கஜினி. இதில் அமீர்கான், அசின் நடித்திருந்தனர். படத்தில் வில்லனான பிரதீப் ரவாட்டின் கதாபாத்திர பெயர்தான் கஜினி. இப்படம் 2008ல் வெளியானது.
5. Nayak – Mudhalvan
ஷங்கர் இயக்கத்தில் 1999ல் வெளிவந்த முதல்வன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு Nayak என்னும் பெயரில் ஹிந்தியில் அனில் கபூர் நடிப்பில் வெளியானது. ராணி முகர்ஜி, அம்ரீஷ் பூரி, பரேஷ் ராவல் போன்றோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
4. Alaipayuthey – Saathiya
காதல் திருமணத்தின் புதிய பார்வையை நமக்கு எடுத்துக் காட்டிய திரைப்படம் அலைபாயுதே. இதன் ஹிந்தி பதிப்பு விவேக் ஓபராய், ராணி முகர்ஜி நடிப்பில் 2002ல் வெளியானது.
3. Holiday: A Soldier Is Never Off Duty – Thuppakki
இராணுவ வீரர்களின் பெருமையை பறைசாற்றிய துப்பாக்கி படத்தின் ஹிந்தி பதிப்பு Holiday: A Soldier Is Never Off Duty. இப்படத்தில் அக்சய் குமார், சோனாக்ஸி சின்ஹா நடித்திருந்தனர். படம் 2014ல் வெளியானது.
2. Singam-Singham
பெயர் மாற்றம் செய்யப்படாமல் சிங்கம் என்ற பெயரிலேயே அஜய் தேவ்கன் நடிப்பில் மறுவுருவாக்கம் செய்ப்பட்ட பாலிவுட் திரைப்படம். 2011ல் வெளியான இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
1. ThevarMagan-Virasat
நடிகர் திலகம் சிவாஜி மற்றும் உலகநாயகன் கமல் நடிப்பில் 1992ல் வெளிவந்த தேவர் மகன் படத்தின் ஹிந்தி ரீமேக்தான் Virasat. இந்த படத்தில் அனில் கபூர், அம்ரிஷ் புரி, தபு, பூஜா பத்ரா போன்றோர் நடித்திருந்தனர். படம் வெளியான வருடம் 1997.