செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

விசா இல்லாம இந்த 10 நாடுகளுக்கு நீங்க போகலாம்.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

உலகை ஆராயவும், புதிய இடங்களைக் கண்டறியவும் பலருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதிர்ஷ்டவசமாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, இந்த ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் சூழல் தற்போது உருவாகி உள்ளது. விசா வாங்குவதற்கு எவ்வளவு திண்டாட வேண்டும் என்று நமக்கு தெரியும்.

அதனால், சுற்றுலா ஆர்வலர்களின் சிரமத்தை போக்க, விசா இல்லாமல் பல நாடுகளுக்கு செல்லலாம் என்ற ஒரு விஷயத்தை கொண்டு வந்தனர். குறிப்பாக, ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.

தாய்லாந்து: இங்கு பிரம்மிக்க வைக்கும் கடற்கரைகள், கலாச்சாரம் மற்றும் சுவையான உணவு வகைகளை மக்கள் ஆராயலாம்.

மலேசியா: பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள், போன்ற அடையாளங்களுடன், மழைக்காடுகள் மற்றும் சிட்டி வாழ்க்கையை ஒன்றாக இங்கு என்ஜாய் செய்யலாம்.

கத்தார்: கத்தார் செல்ல 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. தோஹா (Doha) நகரின் அற்புதமான, வியக்க வைக்கும் அழகை கண்டு ரசிக்கலாம்.

இலங்கை: இலங்கையில், 6 மாதங்களுக்கு இலவச விசா கொடுக்கிறார்கள்.. செழிப்பான கலாச்சாரம் மற்றும் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற அழகிய தீவுகளை கண்டு ரசிக்கலாம்.

சீஷெல்ஸ்: இங்கு 30 நாட்களுக்கு இலவச விசா. இங்கு கடற்கரைகள், பவளப் பாறைகள் மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

மக்காவ்: 30 நாட்களுக்கு இலவச விசா. இங்கு கிழக்கின் லாஸ் வேகாஸில், நைட் லைப் கலாச்சாரம் சிறப்பாக இருக்கும். அதை பார்க்கவே அங்கு செல்லலாம்.

பூடான்: இங்கு செல்ல 14 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. இங்கு இமயமலையின் அமைதியான நிலப்பரப்புகள், கம்பீரமான மடங்கள் மற்றும் வளமான ஆன்மீக கலாச்சாரத்தை கண்டு ரசிக்கலாம்.

நேபாளம்: நேபாளத்திற்கு செல்ல விசா தேவையில்லை. இங்கு எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம். இந்த நாடு சாகச அனுபவங்களை பெறலாம் மற்றும் வளமான சூழலை கண்டுகளிக்கலாம்.

மொரிஷியஸ்: இந்த இடத்திற்கு செல்ல 90 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டு உள்ளது. இங்கு ஆடம்பர ஓய்வு விடுதிகள் தங்கி அழகிய கடற்கரைகள் விசிட் செய்யலாம். மேலும் சுவையான உள்ளூர் உணவுகளை உண்டு மகிழலாம்.

எல் சால்வடார் (El Salvador): இங்கு செல்ல 180 நாட்கள் வரைக்கும் விசா தேவை இல்லை. எல் சால்வடார் (El Salvador) வரலாறு, கலாச்சாரம் மற்றும் அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்றவை.

நீங்கள் உலகம் சுற்றும் வாலிபராக இருந்தால், கண்டிப்பாக இந்த இடத்திற்கு மிஸ் பண்ணாம போங்க..

- Advertisement -spot_img

Trending News