புதன்கிழமை, மார்ச் 12, 2025

எதிர்பார்ப்பு இல்லாமல் தியேட்டரில் வெற்றி பெற்ற 10 படங்கள்.. நின்ன விளையாடிய சதுரங்க வேட்டை

H Vinoth: பல கோடி செலவு செய்து ப்ரோமோஷன் செய்தாலும் சில படங்கள் படுதோல்வியை சந்திக்கிறது. ஆனால் சத்தமே இல்லாமல் வெளியாகி தியேட்டரில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் உண்டு. அந்த லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஹெச் வினோத். முதல் படத்திலேயே எதிர்பாராத வெற்றியை கொடுத்தார். நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். நூதனமான திருட்டை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் கைதி. இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் தியேட்டரில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் பிகில் கலந்த படமாக வெளியானது தான் ராட்சசன். ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை குவித்தது.

எதிர்பாராமல் தியேட்டரில் வெளியாகி வெற்றி கண்ட 10 படங்கள்

அட்லியின் முதல் படமான ராஜா ராணி படமும் சைலன்டாக வந்து சாதனை படைத்தது. இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடித்திருந்தனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் அண்மையில் எடுக்கப்பட்டு வெளியானது.

விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான படம் தான் மகாராஜா. எதிர்பார்க்காத நேரத்தில் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஓடிடியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவானது தான் நானும் ரவுடிதான். அசல்ட்டாக வந்த இந்த படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

ஜீவா மற்றும் அஜ்மல் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் கோ. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

கமல் மற்றும் ஜோதிகா காம்பினேஷனில் வெளியான படம் தான் வேட்டையாடு விளையாடு. கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் பீட்சா. மர்மம் கலந்த திகில் படமாக எடுக்கப்பட்ட இந்த படம் அதிக நாள் ஓடியது.

Trending News