ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இதுவரை ஆஸ்கர் விருதுக்கு சென்ற 10 படங்கள்..18 வருடத்திற்கு பின் சிவாஜியை ஜெயித்த கமல்

1929 ஆம் காலகட்டங்களில் இருந்து ஆஸ்கர் அவார்ட் கொடுக்கப்படுகிறது. ஒரு துறையில் முழுவதுமாக குறைகள் இன்றி, வெற்றியடைந்து அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துகளோ, பிழையோ இல்லையென்றால் இந்த விருது வழங்கப்படும். அப்படி இதுவரை ஆஸ்கர்க்கு சென்ற தமிழ் படங்களின் விபரம்

தெய்வமகன்:1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது தெய்வமகன் படம். அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று வேடத்தில் நடித்து சிவாஜி கணேசன் அசத்தி இருப்பார். இந்த படம் தான் தமிழில் முதல் முதலாக ஆஸ்கர் விருதுக்கு சென்றது.

நாயகன்: அதன் பிறகு 18 வருடங்கள் கழித்து 1987ல் தமிழில் ஆஸ்கருக்கு சென்ற படம் இது. கமல் தன் நேர்த்தியான நடிப்பின் மூலம் சிவாஜி கணேசனின் 18 வருட சாதனையை முறியடித்தார். ஆஸ்கருக்கு சென்ற இரண்டாவது படமாக நாயகன் இடம் பெற்றது.

அஞ்சலி:1990 குழந்தைகளுக்கான சிறந்த படமாக அஞ்சலி இடம்பெற்றது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ரகுவரன், ரேவதி மற்றும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த படத்தில் நடித்து அசத்தியிருந்தார்கள்.

தேவர் மகன்: கமல், சிவாஜி கணேசன் மற்றும் நாசர் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படமும் ஆஸ்கர்க்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போதைய காலகட்டங்களில் இந்த படத்துக்கு பல எதிர்ப்புகளும் கிளம்பியது.

குருதிப்புனல்:1995 இல் வெளிவந்த இந்த படமும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்1996 சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் படமும், கமலின் ஹேராம் படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது பரிந்துரைக்கப்பட்டது.

ஜீன்ஸ், விசாரணை, கூலாங்கல்: போன்ற படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இதில் கமல் நடிப்பில் உருவான நான்கு படங்களும், சங்கர் இயக்கிய படங்கள் இருமுறையும் ஆஸ்கருக்கு சென்றுள்ளது.

Trending News