வியாழக்கிழமை, நவம்பர் 7, 2024

அதிபர் டிரம்ப் போட போகும் முதல் கையெழுத்து.. கேள்வி குறியாகும் 10 லட்சம் இந்தியர்களின் நிலை!

Donald Trump: அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகி இருக்கிறார். அமெரிக்காவை பொறுத்த வரைக்கும் அந்த நாட்டுக்கு யார் அதிபர் ஆகிறார் என்பதை மற்ற நாடுகளின் தலைவர்கள் எப்போதுமே பெரிய அளவில் எதிர்பார்ப்பார்கள்.

இதற்கு காரணம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு அமெரிக்கா அதிபர் கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது என்பது எழுதப்படாத விதி. அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருப்பது இந்தியாவுக்கு சாதகமா என்ற கேள்வி நேற்றிலிருந்து எல்லோருக்குமே இருந்திருக்கும்.

அதிபர் டிரம்ப் போட போகும் முதல் கையெழுத்து

டிரம்ப் மற்றும் மோடி இருவருக்கும் இடையே நல்ல நட்பு பரிமாற்றம் இருப்பதால் பெரிய அளவில் இது நமக்கு சாதகம் தான் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த புதிய ஆட்சி மாற்றத்தால் அமெரிக்காவில் வசிக்கும் 10 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்ற செய்தி தான் வருத்தமளிக்கிறது.

டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது தன்னுடைய வாக்குறுதிகளில் ஒன்றாக அடுத்தடுத்து சொன்னது தானியங்கி சிட்டிசன்ஷிப் முறையில் மாற்றம் என்பது தான். அதாவது ஒரு குழந்தை அமெரிக்காவில் பிறந்தால் ஆட்டோமேட்டிக்காக அந்த குழந்தைக்கு கிரீன் கார்டு கிடைத்துவிடும்.

இதைத்தான் தானியங்கி சிட்டிசன் சிரிப்பு என்று சொல்வார்கள். இந்த முறையில் தான் மாற்றத்தை ஏற்படுத்த முதல் கையெழுத்து போடுகிறாராம் டிரம்ப். அதாவது ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு கிரீன் கார்டு பெறுவதற்கு அம்மா அல்லது அப்பா அமெரிக்கா குடிமகனாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் அமெரிக்காவின் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது இருப்பிடச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த புதிய விதி தான் தற்போது கிரீன் கார்டு பெற காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களை பதற வைத்திருக்கிறது.

ஏற்கனவே இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற நிறைய சட்ட சிக்கல்கள் இருப்பதாக. சொல்லப்படுகிறது தற்போது இந்த புதிய சட்டம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றப் போகிறது. இந்த விஷயத்தில் தலையிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஏதாவது மாற்றம் கொண்டு வருகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News