வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

10 நிமிடம் அட்ஜஸ்ட்மெண்ட், லேடி சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு.. ஆடிஷனில் நடிகைக்கு நடந்த கொடுமை

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக பேசி பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அக்கட தேசத்தில் செம போல்டாக இருக்கும் நடிகையை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவருடன் நடிக்க வேண்டும் என இளம் நடிகர், நடிகைகளும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த சமயத்தில் இளம் நடிகை ஒருவர் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிப்பதற்காக ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார். ஒரு தனி அறையில் தான் ஆடிஷன் நடந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த நபர்  நடிகையின் கூந்தல் கலைந்திருப்பதாகவும், அதை பக்கத்து அறைக்கு சென்று சரி செய்துவிட்டு வருமாறு கூறினார். உடனே அவரும் பக்கத்து அறைக்கு சென்றிருக்கிறார்.

Also Read: கண்ட இடத்தில் உரசிய உதவி இயக்குனர்.. கடுப்பாகி அறைந்த நடிகை

அப்போது ஆடிஷன் எடுத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று அவர் பின்னால் வந்து மார்பகத்தில் கை வைத்து அழுத்தி விட்டார். இறுக்கமாக கட்டிப்பிடித்து விட்டதால், அவரின் பிடியிலிருந்து விடுபட முயற்சித்த போதும் முடியவில்லை. ’10 நிமிடம் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் செய்,  உனக்கு லேடிஸ் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்கும் வாய்ப்பை தருகிறேன்’ என்று  கூறினார். 

உடனே அந்த நடிகை கத்திக்கொண்டு அங்கிருந்த கேமராவை தள்ளிவிட்டு அவரது கவனத்தை திசை திருப்பி, ஓடி வந்து விட்டார். வெளியில் அந்த நடிகையின் அம்மா, தங்கை இருவரும் இருக்கும்போதே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பல இடங்களில் திரையுலகில் சேர்ந்தவர்கள் கண்ணியமாக நடந்து கொண்டாலும், சில இடங்களில் இது போன்று நடந்து கொண்டிருக்கிறது.

Also Read: கடைசி வரை ஒரு தலை காதலாக மாறிய நடிகையின் காதல்.. மரணப்படுக்கையில் நிறைவேறிய ஆசை

சினிமாவிற்கு வரும் புதிதில் இந்த இளம் நடிகைக்கு இப்படி நடந்ததை வெளியில் சொன்னால்  இண்டஸ்ட்ரியை விட்டு ஒதுக்கி விடுவார்கள் என்பதற்காகவே இவ்வளவு நாள் அந்த இளம் நடிகை வெளியில் சொல்லாமல் இருந்தாராம். ஆனால் இப்போது அவர் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பதால், தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக தெரியப்படுத்தியுள்ளார்.

Trending News