செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

இதுவரை லியோவுக்கு பூகமமாய் வெடித்த 10 பிரச்சனைகள்.. தளபதிக்கு தலைவலி மருந்தாக இருக்கும் லோகேஷ்

Leo Movie: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் உடன் 2வது முறையாக லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னும் 5 தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்திற்கு பூதாகரமாக 10 பிரச்சனைகள் எழுந்தது. இன்னும் ரிலீசாகுவதற்குள் என்னென்ன நடக்குமோ என தளபதி ரசிகர்கள் பீதியில் இருக்கின்றனர்.  லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆன விஜய் பாடிய ‘நான் ரெடி’ என்ற பாடலின் லிரிக் வீடியோவில் தளபதி புகை பிடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அது மட்டுமல்ல அந்தப் பாடலில் இடம் பெற்ற வரிகளில் போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிப்பது போல் இருந்ததால், பாடல் வரிகளுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அதிரடியாக அந்த வரிகள் எல்லாம் மாற்றப்பட்டது.

மேலும் தளபதி ரசிகர்களால் எதிர்பார்த்து இருந்த லியோ படத்தின் ஆடியோ லான்ச் முதலில் வெளிநாடுகளில் நடத்தப்படுவதாக சொல்லி, மலேசியாவில் பிரம்மாண்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பின்பு தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. எங்கேயாவது வைங்க ஆனா ரஜினி சொன்ன காக்கா- கழுகு கதைக்கு விஜய் ஒரு குட்டி ஸ்டோரி மூலம் ரிவிட் கொடுத்தால் போதும் என தளபதி ரசிகர்கள் எல்லாத்துக்கும் அமைதியாக இருந்தனர்.

ஆனால் ஏஆர் ரகுமான் இசை கச்சேரியில் நடந்த அசம்பாவிதம் லியோ ஆடியோ லான்ச்சுக்கு நடக்கக்கூடாது என்பதற்காக பாதுகாப்பை கருதி லியோ படத்தின் ஆடியோ லான்ச்சை ரத்து செய்துவிட்டனர். ஆனால் இதற்குப் பின்புலத்தில் அரசியல் காரணம் இருக்கிறது. அதன் பின்பு தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக லியோ படத்தின் டிரைலர் வெளியானது. ஆனால் அதில் விஜய் பேசும் கெட்ட வார்த்தைக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ஏனென்றால் தளபதிக்கு இளம் தலைமுறையினர் மட்டுமல்ல குட்டீஸ்களும் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் இந்த கெட்ட வார்த்தையை எல்லாம் எளிதில் கற்றுக் கொள்வார்கள் என்று பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த கெட்ட வார்த்தையை மியூட் செய்து விட்டனர்.

மேலும் லியோவின் ‘நான் ரெடி’ பாடலில் பாடிய 2000 டான்சர்ஸ்-க்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று பல பேர் புகார் அளித்தனர், எப்படியோ அதையும் படக்குழு சமாளித்தது. இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அதை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் புக் செய்கின்றனர். ஆனால் அந்த படம் ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகும் என்றும் புரளியை கிளப்பி விட்டு ரசிகர்களை திண்டாட வைத்தனர். ஆனால் படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகும் என்று பட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அதிகாலை காட்சி திரையிடக்கூடாது என்கின்ற அறிவிப்பும் தளபதி ரசிகர்களுக்கு இடியாய் விழுந்தது. அத்துடன் முதல் ஷோ 6 மணிக்காவது இருக்கும் என எதிர்பார்த்தனர், ஆனா 9 மணிக்கு தான் ஃபர்ஸ்ட் ஷோ போட வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டனர். இதை மீறினால் நிச்சயம் தியேட்டர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விட்டுள்ளனர். இது மட்டுமல்ல இப்போது ஐமேக்ஸ் பிரீமியம் காட்சிகளையும் ரத்து செய்திருப்பதாக கூறுகின்றனர்.

லியோ திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஐமேக்ஸ் ப்ரீமியம் காட்சிகள் தற்போது வெளிநாடுகளில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் சில ரசிகர்கள் ஐமேக்ஸ் திரையரங்குகளில் லியோ வெளியாகாத நிலையில், அவர்கள் புக்கிங் செய்யப்பட்டதற்கான ரீஃபண்ட் செய்யப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் ஆதாரமாக பதிவிட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக ஒரு கட்டத்தில் லோகேஷ்- விஜய் இருவருக்கும் முட்டி கொண்டதாகவும் புரளியை கிளப்பி விட்டனர். ஆனால் லியோ படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவருக்கு பக்க பலனாக இருப்பது லோகேஷ் தான்.

அவர்தான் அசால்ட் ஆக லியோ படத்திற்கு வருகிற பிரச்சினையை எல்லாம் தூசி போல் ஊதி தள்ளுகிறார். இந்த படத்திற்கு மட்டுமல்ல விஜய்யின் எல்லா படங்களுக்கும் இதே போன்று தான் நிறைய பிரச்சனைகள் அடுத்தடுத்து எழும். இது தளபதிக்கு புதுசு இல்ல. இருப்பினும் லியோ படத்திற்கு கொஞ்சம் ஓவராகவே பிரச்சனையை கிளப்பி விடுகின்றனர். இதையெல்லாம் பார்த்துட்டு, ‘விட்ராத தளபதி!’ என்றும் அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் நம்பிக்கையான வார்த்தைகளை பதிவிடுகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News