சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

10 மடங்கு உயர்ந்த ஜெயிலர் பட டிக்கெட் விலை.. கண்டும் காணாமல் இருக்கும் ரெட் ஜெயண்ட்

Jailer Movie: பொழுதுபோக்குக்காக நடத்தப்பட்டு வரும் திரையரங்குகள் தற்போது வியாபார ரீதியாக மேற்கொள்ளும் அநியாய சம்பவம், அந்தப் பக்கம் தலைவைத்து படுக்கமுடியாத அளவிற்கு இருந்து வருகிறது. தற்பொழுது ஜெயிலர் படத்தின் டிக்கெட் விலை குறித்த தகவலை இங்கு காண்போம்.

இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தான் ஜெயிலர். பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி 10ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் பல பிரபலங்கள் இடம்பெறுவதால் இப்படத்தின் சஸ்பென்ஸ் குறித்து எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read: தக்‌ஷா டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம்.. நிஜ வாழ்க்கையிலும் சாணக்கியன் என உறுதி செய்த அஜித்

மேலும் இப்படத்தில் இடம்பெறும் காவலா பாடல், படம் ரிலீஸ் இருக்கு முன்பே பட்டையை கிளப்பி வருகிறது. இது போன்ற பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய படத்தை காண அதிகாலையில் ஸ்பெஷல் ஷோ இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது போன்ற நிறைய அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தில் அதிகாலை காட்சிகளை ரத்து செய்ய கவர்மெண்ட் திரையரங்குக்கு ஆடறிட்டது. இது ஒரு பக்கம் வரையறுக்க தகுந்த மாதிரி இருந்தாலும், இதைவிட பல அநியாயங்களை திரையரங்குகள் செய்து வருகின்றன.

Also Read: அக்கா தங்கை இணைந்து வெற்றி கண்ட 6 படங்கள்.. அம்பிகா ஸ்கோர் செய்தும் தட்டி தூக்கிய ராதா

தீவிர ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என தான் ஆசைப்படுவார்கள். அவ்வாறு இருக்க, தற்போது இவர்கள் தலையில் இடியறக்கும் விதமாய், ஃபர்ஸ்ட் ஷோவின் டிக்கெட்டின் விலை வெளியாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 3000 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளதாம்.

மற்ற காட்சிகளுக்கு ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயித்துள்ளனர். டிக்கெட்டுகளை தக்க வைத்துக் கொள்ள, மேலும் டிக்கெட் மூலம் நல்ல லாபம் பார்க்க, டிக்கெட்டினை இவர்களை அதிக விலைக்கு விற்கிறார்கள் என சில கணிப்புகள் கசிந்து வருகிறது. இதை தடுக்கும் விதத்தில் ரெட் ஜெயண்ட் செயல்பட்டால் நன்றாக இருக்கும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

Also Read: ரஜினிக்கு பிடித்த சரக்கு மற்றும் சிகரெட் பிராண்ட் இதுதான்.. ஒரு நாளைக்கு இத்தனை பாக்கெட் குடிப்பாரா.?

Trending News