சாதனைகள் என்றால் அது முறியடிப்பதற்கு தான். ஆனால் இன்றுவரை முறியடிக்க முடியாத சாதனைகள் பல இருக்கின்றன. அப்படி கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனைகளும் இருக்கின்றன. அவற்றுள் ஐந்து சாதனைகள் இந்தியர்கள் வசம் உள்ளது.
சுனில் நரைன் : 20 ஓவர் போட்டிகளில் சூப்பர் ஓவர் என்பது போட்டி முடிவின்றி இருக்கும்போது போடப்படும் ஓவர். அந்த ஓவரில் இதுவரை யாரும் மெய்டன் போட்டதில்லை ஆனால் சுனில் நரேன் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் போது சூப்பர் ஓவரில் மெய்டன் ஓவர் வீசியுள்ளார்.
சமிந்தா வாஸ்: இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். இவர் ஒருமுறை ஜிம்பாவே அணிக்கு எதிராக 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைபற்றினார். இதுவே இன்று வரை ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
கிறிஸ் கெயில்: அதிரடி ஆட்டக்காரரான இவர் ஒருமுறை ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அடிக்கப்பட்ட 175 ரன்கள் 66 பந்துகளில் அடித்துள்ளார், இதுவே இப்போது வரை சாதனையாக உள்ளது.
அஜிங்கிய ரஹானே: இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனான இவர் ஒரு இன்னிங்சில் 8 கேட்சுகள் பிடித்து சாதனை செய்துள்ளார். இதுவரை இதனை யாரும் முறியடிக்கவில்லை.
பாபு நாட்கர்ணி: டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசியுள்ளார் இவர் ஒரு இந்தியர், மும்பையைச் சேர்ந்தவர். இவர் செய்த சாதனையை இன்றளவும் யாரும் முறியடிக்கவில்லை.
டென்னிஸ் லில்லி: ஆஸ்திரேலியாவின் அற்புதமான வீரர் இவர். இவர் மொத்தமாக 70 டெஸ்ட் போட்டி மற்றும் 63 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 20 ஆயிரத்து 394 பந்துகள் வீசியுள்ளார். இதுவரை ஒரு நோ பால் மற்றும் ஒரு ஒயிட் பால் கூட போட்டதில்லை.
ராகுல் டிராவிட்: தொடர்ந்து 173 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் விளையாடியுள்ளார். இந்த சாதனையையும் இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை.
யுவராஜ் சிங்: இவர் தொடர்ந்து 6 சிக்சர்கள் அடித்தது சாதனை அல்ல 12 பந்துகளில் அரை சதம் அடித்த சாதனையை இனிமேல் ஒருவர் முறியடிக்க வேண்டும் என்றால், அவர் 11 பந்துகளில் அடிக்க வேண்டும். இந்த சாதனையை முறியடிப்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
ரோகித் சர்மா: ஒரு நாள் போட்டிகளில் 200 என்பது சர்வ சாதாரணமாய் போய்விட்டது அதற்கு காரணம் ரோகித் சர்மா. 264 ரன்களை முறியடிப்பதும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
டான் பிராட்மேன்: டெஸ்ட் போட்டிகளில் இவரோட சராசரி 99.99 இதனை எவராலும் முறியடிக்க முடியாது என்று சொல்லலாம்.