இப்போது உள்ள இளம் இயக்குனர்கள் போல இல்லாமல் 15 வருடத்திற்கு முன்பு இயக்குனர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தான் ஜெயிக்க முடியும். அப்படி பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் கேஎஸ் ரவிக்குமார்.
ஆனால் இவர் முதல் வெற்றியை காண்பதற்கு முன்னதாக பத்து வருடங்களாக அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்து பல அவமானங்களை சந்தித்து உள்ளார். அப்போதெல்லாம் பல தயாரிப்பாளர்களும் கே எஸ் ரவிக்குமார் படத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் உடனே அட்வான்ஸ் தொகையை வாங்குமாறு கூறுவார்களாம்.
அதுவும் சார்லி, கேஎஸ் ரவிக்குமார் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதைப் பார்த்தால் அந்த தயாரிப்பாளரை கூப்பிட்டு கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தில் இருக்கிறான் பணத்தை முன்னாடியே வாங்கிடுங்க எப்படியும் படம் ஓடாது என பல தயாரிப்பாளரும் கூறியதாக கேஎஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் சொன்னது போலவே பத்து வருடமாக அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய கேஎஸ் ரவிக்குமாருக்கு இரண்டு படங்கள் மட்டும் ஓடியது. அந்தப் படம் ராஜா ராஜா தான் மற்றும் புது வசந்தம்.
ஆனால் சேரன் பாண்டியன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றிநடை போட்டதால் அப்படியே காலப்போக்கில் கே எஸ் ரவிக்குமார் கமர்சியல் இயக்குனர் என அனைவரும் கூறியதாக கூறினார்.
அது மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் படத்தில் நான் இருந்தால் ஓடாது என சொன்னவர்கள் அதன்பிறகு என் படத்தில் நடித்தால் அதிகமான பட வாய்ப்புகள் வரும் என அவர்களே பலமுறை கூறியதாக தெரிவித்துள்ளார்.