திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

10 வருஷ போராட்டம், அட்டகத்திக்கு முன்பே ஹீரோவா நடிச்சிட்டேன்.. கெத்து தினேஷ் ஓபன் டாக்

சினிமாவில் நுழைவது எளிதான காரியம் அல்ல. அப்படி நுழைந்துவிட்டால் அங்கு நிலைத்து நிற்பதும் எளிதான காரியம். பல ஆண்டுகள் இத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர்கள் கூட தொடர்ந்து ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

அப்படியிருக்க எந்த பின்புலமும் இல்லாமல் தனியாக சினிமாவுக்கு வந்து சைலண்டாக சாதித்துக் காட்டியவர் தான் கெத்து தினேஷ். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் தான் ரசிகர்களால் கவனிக்கப்பட்டாலும் அதற்கு முன்பேல் ஜீவாவின் ஈர், எவனோ ஒருவன், ஆடுகளம், மெளனகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதன்பின் பா.ரஞ்சித்தின் அட்டகத்தி பட த்தில் ஹீரோவாக அறிமுகமாகி, எதிர் நீச்சல், குக்கூ, விசாரணை, கபாலி, மெர்லின், களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், ஹரீஸ் கல்யாணுடன் இணைந்து நடித்த படம் லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.50 கோடி வசூலித்துள்ளது. தினேஷ் நடித்த கேரக்டரும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

சினிமாவில் ஹீரோவானது பற்றி தினேஷ் கூறியதாவது:

சமீபத்தில் தினேஷ், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ’’அப்பா பொதுப்பணித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார். நான் ஏர்போர்ஸ் போகனும், எப்.எம், சேனல் ஆரம்பிக்கனும் இப்படி பல கனவுகளில் இருந்தேன்.

ஆனால் அப்பாவுக்கு என்னை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் கொண்டு போகனும்னு நினைச்சாங்க. நான் மியூசிக் டிரைக்டர் ஆகனும்னு நினைச்சேன். அதன்பின், சினிமா இயக்கமுன்னு நினைச்சேன். அப்போது, கேமராவை பத்தி கத்துக்கனும்னு முடிவு பண்ணி, பாலுமகேந்திரா சார் கிட்ட போக முடிவு செய்தேன். இதற்காக அதிகாலையில் ராயபுரத்தில் இருந்து சாலிகிராமத்துக்கு நடந்தே போவேன்.

ஒரு நாள் நான் எடுத்த போட்டோவ பாத்திட்டு என்னை ஆபிஸ்க்கு வரச் சொல்லிட்டாரு பாலுமகேந்திரா சார். அவர் என்னிடம், டைரக்சனுக்கு பெரிய கூட்டமே இருக்கு. நடிக்கத்தான் ஆளு வேணும்ன்னு சொல்லிட்டார். அப்புறம் என் புகைப்படத்தை கொண்டுபோய் அவரின் உதவி இயக்குனர் வெற்றிமாறன் சார்கிட்ட கொடுத்தேன்.

அப்போ, தனுஷ் சார் நடிக்கும் அது ஒரு கனாக்காலம் படம் எடுத்திட்டிருந்தாங்க. எனக்கு சின்ன ரோல் கொடுத்தாங்க. என்னோட கூச்சத்தால, அதுல வேறொருத்தர் நடிச்சாரு. பின், 2004 ல் நாடகத்துல நடிச்சேன். வெற்றிமாறன் சார்தான் கூத்துப்பட்டறை பற்றி சொன்னாரு. அதில வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது.

அட்டகத்தி படத்துக்கு முன்பே ஹீரோ

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்போது, எஸ்.பி.ஜனநாதனின் ஈ படத்தில் நடிக்க நல்ல ரோல் கிடைத்து. அட்ட கத்தில நடிக்கும் முன்பே தசை நித்திஷ் படத்துல ஹீரோவா நடிச்சேன். அப்படம் ரிலீஸ் ஆகல. 10 வருச போராட்ட த்தில் ஒரு படத்துல ஹீரோவா நடித்துவிட்டேன். அதன்பிறகு பா.ரஞ்சி சாரின் அட்டகத்தி படத்துல ஹீரோவாக நடித்தேன்’’ என்று கூறினார்.

பல ஆண்டுகள் சினிமாவில் போராடினாலும் தனக்கான அடையாளத்தை தினேஷ் ஏற்படுத்தி ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார். அவரது அடுத்த படமான வேட்டுவம் பட த்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இதில் வில்லனாக ஆர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News