சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

100 நாட்களாக முதல் இடத்தைப் பிடித்த 6 படங்கள்.. அதிக இடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்

தமிழ்சினிமாவில் வெளியாகும் படங்கள் நூறுநாள் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகப்பெரிய விஷயம். அதிலும் 100 நாளிலும் முதலிடத்தில் இருப்பது சாதாரண காரியம் அல்ல. அவ்வாறு திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு மேலாக முதலிடத்தில் இருந்த டஃப் ஆறு படங்களை பார்க்கலாம்.

ஜீன்ஸ் : ஷங்கர் இயக்கத்தில் 1998 இல் வெளியான திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் பிரசாந்த் மற்றும் நாசர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார்கள். உலக அழகி ஐஸ்வர்யா ராய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மொத்தமாக 20 நிமிடங்கள் மட்டுமே ராதிகா நடித்திருந்தார். இப்படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஜீன்ஸ் படம் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

காதலுக்கு மரியாதை : பாசில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை. விஜய், ஷாலினி இருவரும் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்கிறார்கள். இவர்களின் தியாகத்தை உணர்ந்த பெற்றோர்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறார்கள். இளையராஜா இசையில் உருவான காதலுக்கு மரியாதை படத்தின் பாடல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

படையப்பா : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 இல் வெளியான திரைப்படம் படையப்பா. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி என பலர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த் படையப்பாவாக தனது ஸ்டைலின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படம் 100 நாள் தாண்டி வெற்றிப் படமாக ஓடியது.

சந்திரமுகி : பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஜோதிகாவின் சிறப்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. வேட்டையனாக ரஜினியின் லக லக வசனம் திரையரங்கையே அதிர வைத்தது.
சந்திரமுகி படம் திரையரங்குகளில் 890 நாட்கள் ஓடியது. இப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் முதலிடத்தில் இருந்தது.

முதல்வன் : ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், ரகுவரன் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல்வன். ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு நாள் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்தால் என்னென்ன செய்வார் என்பதே முதல்வன். இப்படத்தில் முதல்வர் பதவியில் இருக்கும்போது எதிரிகளின் இடையூறுகள், இழப்புகள் இவற்றை கடந்து எப்படி வருகிறார் என்பதே படத்தின் கதை.

முத்து : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து. ஜமீனின் பிறந்து வேலைக்காரனாக பணிபுரியும் முத்து கடைசியில் ஜமீனுக்கு சொந்தக்காரன் நான்தான் என தெரிந்த பிறகும் வேலைக்காரன் ஆகவே நடந்துகொள்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையில் எஸ்பிபி குரலில் வெளியான ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடல் இன்றும் பலரது பேவரட் பாடலாக உள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Trending News