வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க 100 பேரு ஆனா இந்த ஒரு மனுஷனை தொடல ஏன்.? நடிக்கணும் ஆண்டவரே!

Super Star Rajinikanth: எங்க திரும்பினாலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பேச்சு தான் நிலவி வருகிறது. இவற்றை பூதாகரமாக மாற்றாமல் விட மாட்டார்கள் என்று சொல்லும் விதமாய் அவரவர் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புகழின் உச்சம் தொட்ட பிரபலம் ஒருவரின் பக்கம் கூட செல்ல முடியாதது ஏன் என்ற தகவலை இங்கு காண்போம்.

நீ பெரியதா நான் பெரிதா என நடிப்பிற்கு போட்டி போட்டதை காட்டிலும், தற்பொழுது பட்டத்திற்கு போட்டி போடுவது தான் அதிகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றை பிரச்சினையாக மாற்றும் முயற்சியில் பலர் ஊதி பெரிதாக்கி வருகின்றனர். அவரவர் திறமைக்கேற்ற பட்டமே நிலையானது என்பதை உண்மையான ஒன்று.

Also Read: ரொம்ப வயலன்ஸ் என பிரச்சனை வந்த 6 படங்கள்.. ஜெயிலரை விட  எண்பதுகளில் வன்முறையாக வந்த கொடூர மூவி 

அதை ஒருவரிடம் இருந்து மற்றொருவர் பறிக்க முயல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்குப் பின் அந்த பட்டம் யாருக்கு கொடுக்கப்பட்டது. அவற்றை யாருக்கு கொடுத்தாலும் பொருந்தாதல்லவா அது போல தான் சூப்பர் ஸ்டார் பட்டமும்.

அவ்வாறு சமீப காலமாய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பல போட்டிகள் நிலவி வருகிறது ஆனாலும் உலகநாயகன் கமலஹாசனிடம் யாரும் நெருங்காத காரணம் என்ன தெரியுமா? அவரின் உன்னதமான நடிப்பும், அசத்தலான துணிச்சலும் தான். எந்த ஒரு பட்டமும் சும்மா கிடைப்பதில்லை.

Also Read: பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் கொடுத்த ஜெயிலர் ரிவ்யூ.. பத்திரிக்கையாளர் ஷோவில் நடந்த கலாட்டா

அவ்வாறு பார்க்கையில் உலக நாயகன் பட்டம் கமலுக்கு கொடுக்கப்பட்டது என்றால் அது ஓவர் நைட்டில் கிடைத்த புகழ் அல்ல அவரின் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான். இவரின் நடிப்பிற்கும், அனுபவத்திற்கும் முன் யாராலும் நிற்க முடியாது என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும்.

எந்த கதாபாத்திரம் எடுத்தாலும் அந்த கதாபத்திரமாகவே மாறி நடிக்கும் தன்மை கொண்டவர். அவ்வாறு படத்தில் ஓவர் ஆக்டிங் காட்டாமல் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டும் வல்லமை கொண்டவர் கமல். உலகநாயகன் கமலிடம் போட்டி போடுவது என்றால் முதலில் நடிக்க தெரியணும், மேலும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்க தெரியணும். இதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதற்கு உதாரணமாக தான் இவர் பட்டத்தை பறிக்க யாரும் முயற்சிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Also Read: சுந்தர் சி, லாரன்ஸ் கூட ஜோடி போட்டு சோலியை முடித்த 5 நடிகைகள்.. ஆடையை குறைத்தும் வாய்ப்பு இல்லாத பரிதாபம்

Trending News