திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மாஸ்டர் படத்தை மலைபோல் நம்பும் தியேட்டர் முதலாளிகள்.. நேரில் சந்தித்த விஜய்க்கு முதல்வர் கூறிய பதில்

கோலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தான் தளபதி விஜய். தற்போதெல்லாம் இவர் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு  படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்காக விஜய் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம்  கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பொங்கல் அன்று திரையிடப்படவுள்ளது. அதோடு மாஸ்டர் படத்தின் திரை நேரம் 2 மணி 56 நிமிடங்கள், அதாவது கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் கன்னடத்திலும் டப்பிங் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எல்லா படங்களுக்கும் நூறு சதவிகித இருக்கைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, எட்டு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த தியேட்டர்கள் கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டன. இருப்பினும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தியேட்டர்களில் அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல் கொரோனா அச்சத்தாலும், OTT தளங்களின் வரவாலும் மக்கள் கூட்டம் இன்று வரை தியேட்டரை நாடவில்லை. இதனால் தியேட்டர் ஓனர்கள் சோகக் கடலில் மூழ்கியுள்ளனர். தற்போது தியேட்டர்  ஓனர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரே ஆயுதமாக கருதப்படுவது தளபதியின் மாஸ்டர் திரைப்படம் தான்.

சமீபத்தில் கூட நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து தனது மாஸ்டர் படத்திற்காக தியேட்டர்களில் 100% இருக்கைகளை அனுமதிக்க கோரி, கேட்டுக் கொண்டார் என்ற தகவல் இணையத்தில் பரவியது.

master-poster-3
master

ஆனாலும் தளபதியின் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாகவும், தியேட்டர்கள் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுடன் தான் செயல்படும் என்றும் செய்திக்குறிப்பு ஒன்று தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டது.

எனவே, 50% இருக்கைகள் உடன் செயல்பட்டாலும் ‘மாஸ்டர்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு பிளாக்பஸ்டர் படமாவது உறுதி என்று சினிமா வட்டாரங்களில் பலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News