மீண்டும் 500 கோடி வசூலுக்கு பிளான்.. சீனாவில் வசூல் சாதனை படைப்பாரா விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி நடிப்பில், குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவான படம் மகாராஜா. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நடராஜன், சுப்பிரமணியம், அபிராமி, அருள்தாஸ், முனீஸ்காந்த், பாரதி ராஜா ஆகியோர் நடித்திருந்தனர். அஜ்னேஷ் லோக் நாத் இசையமைத்திருந்தார்.

இப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. இப்பட த்துக்கு விமர்சன ரீதியாகவும் பாராட்டுகள் குவிந்து, சினிமா விமர்சகர்களும் திரையுலகினரும் இப்படத்தைப் பாராட்டினர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான ஓல்டு பாய் என்ற படத்தைப் போல மகாராஜா படத்தையும் பார்த்து இப்படத்துடன் அதைக் கம்பேர் செய்து இதன் எடிட்டிங்கையும் கொண்டாடித் தீர்த்தனர்.

ரூ.500 கோடி வசூலிக்கு மகாராராஜா படக்குழு திட்டம்!

விஜய்சேதுபயின் 50 வது படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூலிலும் சாதனை படைத்த நிலையில் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். இப்படத்தின் மேக்கிங்கும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரூ.150 கோடி லாபம் ஈட்டியதாகத் தகவல் வெளியானது. இந்தியாவில் மட்டுமல்ல இப்படம் உலகளவில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓடிடியில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் மகாராஜா படத்தை சீனாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெளியான பாகுபலி, ஆ.ஆர்.ஆர், தங்கல் ஆகிய படங்கள் சீனாவில் பெரும் வெற்றி பெற்றன. எனவே மகாராஜா படமும் சீனாவில் ரிலீசானால் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Leave a Comment