சமீபகாலமாகவே தென்னிந்திய சினிமாவில் சிறந்த படங்கள் உருவாகி வருகின்றன. சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பார்க்காமல் அடுத்த கட்டத்திற்கு அதன் தரத்தை மேம்படுத்தும் விதமாக இயக்குனர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இதர மொழி ரசிகர்களும் தமிழ் படங்களை விரும்பிப் பார்க்கும் அளவிற்கு தமிழ் சினிமாவின் தரமும் உயர்ந்துள்ளது. இது தவிர ஏராளமான தமிழ் படங்கள் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வெற்றியை பெற்று வருகின்றன.
ஒரே மாதிரியான படங்களை வழங்கி வந்தால் ரசிகர்களுக்கு போரடிக்கும் என்பதால், அவ்வபோது புதிதாக ஏதேனும் ஒரு முயற்சியை திரை உலகம் கையாண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களான டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ஒன்றாக இணைந்து 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரிக்க உள்ளனர்.
இந்த படங்களை தயாரிக்க இரு நிறுவனங்களும் சேர்ந்து சுமார் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளனர். இதில் தமிழ் பிளாக்பஸ்டர், ஆக்ஷன், த்ரில்லர்களின் இந்தி ரீமேக்குகள், வாழ்க்கை வரலாறு திரைப்படம், த்ரில்லர், நகைச்சுவை, காதல் படம், மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவங்கள் என 10 படங்களும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டவை.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் முதல், சிறிய பட்ஜெட் வரை வெவ்வேறு வகையில் எடுக்கப்படவுள்ளது. இதனால் சினிமா பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முதல் முறையாக 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்க உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதலீட்டில் முதன்மையாக விளங்கும் லைக்கா மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனங்களை ஓரம் கட்டும் வகையில் ரிலையன்ஸ் தற்போது களத்தில் இறங்க உள்ளது.