தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கி பல கோடி வசூலை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தை சங்கர் இயக்கியிருந்தார். ஜென்டில்மேன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சங்கர். இவருடைய படங்களில் பிரம்மாண்டத்திற்கும், அருமையான தொழில்நுட்பத்திற்கும் பஞ்சமில்லாத அதிரடியான சமூக மாற்ற கருத்துக்களை பேசக்கூடிய படமாக இருக்கும்.
அந்த வரிசையில் ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் ஏவிஎம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான சிவாஜி திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து காலதாமதத்திற்கு பின்னர் உலக அளவில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஸ்ரேயா, விவேக், சுமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அது வரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் இல்லாத அளவுக்கு சிவாஜி திரைப்படம் 84 கோடி வசூலை அள்ளி வசூல் சாதனை படைத்தது.
இந்தப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே அட்வான்ஸாக வாங்கி படத்தை நடித்து முடித்துக் கொடுத்திருக்கிறார்.
அதன்பிறகு படம் வெளியானதும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிவாஜி படத்தில் நடித்ததற்காக ரூபாய் 18 கோடியை சம்பளமாக வழங்கப்படுகிறது. சமீபத்தில் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்ததால் சிவாஜி படத்திற்காக ரஜினி செய்த உதவியை மறக்காத இயக்குனர் சங்கர் நேரில் சந்தித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக பார்க்கப்பட்ட சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே அட்வான்ஸாக வாங்கி அந்த படம் வெற்றி பெற்ற பிறகே தன்னுடைய சம்பளத்தை வாங்கிய பெருந்தன்மை அவருடைய ரசிகர்களால் வைரல் ஆக்கப்படுகிறது.