தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போடுகிறார் தல அஜித். இவருக்கு நடிப்பைத் தாண்டி, கார் மற்றும் பைக் ரேசில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆகையால் தற்போது வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தல அஜித், 10,000 கிலோ மீட்டர் பைக் பயணத்தை தொடங்கி உள்ளார். அந்தவகையில் தல அஜித் சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு, இன்னும் ஒருசில தினங்களில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும் தல அஜித்துடன் பைக் ரைட் செய்யும் சக ரைடர்ஸ் புகைப்படமும் சோஷியல் மீடியாவில் அவருடைய ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அப்படி தான் தல அஜித்தின் சக பைக் ரைடர் ஆன தினேஷ் தற்போது சமூக வலைதளங்களில் சில சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் அஜித் தற்போது மேற்கொண்டு வரும் பைக் பயணத்தை யூடியூப்பில் பதிவேற்றம் படி, தல ரசிகர்கள் தினேஷ் இடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த தினேஷ், ‘நிச்சயம் முடியாது. எனக்கு அஜித் சாரை பற்றி நன்றாக தெரியும். அவர் மிகவும் பிரைவசியை விரும்புபவர். எனவே அவரது பிரைவசியை நாம் மதிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல நான் ஹெல்மெட்டில் கேமரா பொருத்தவும் இல்லை. என்னுடைய செல்போனை கூட பயன்படுத்தவில்லை, தற்போது சோஷியல் மீடியாவில் பரவிவரும் புகைப்படம் கூட அவருடைய அனுமதி பெற்று தான் எடுத்தேன்.
மேலும் அவர் ஒரே முறையில் 10,000 கிலோ மீட்டர் பயணம் செய்து இருக்கிறார் என்பது உண்மை தான். அந்த அளவிற்கு வெறித்தனமான பைக் ரைடர்’ என தனது பதிவில் தினேஷ் தெரிவித்துள்ளார்.
தினேஷ்-இன் இந்த அப்டேட்டை பார்த்த தல ரசிகர்கள் வீடியோ போடா முடியாததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் தல அஜீத்தின் பைக் ரைட் பற்றிய சுவாரசியமான தகவல்களை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி தான் வருகின்றனர்.