ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

கங்குவாவுக்கு இத்தனை ஆயிரம் ஓப்பனிங் ஸ்கிரீனா? தலைசுற்ற வைக்கும் வசூல்.. ஞானவேல் ராஜா கனவு பலிக்குமா?

பார்க்கும் இடமெல்லாம் கங்குவா புரமோசனே இருப்பதால் இது விளம்பரம்தான் என்றாலும் ஹைப் ஏற்றும்போது கொஞ்சம் ஓவராக தெரிகிறது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இதில். சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து இதன் புரமோசன் பணிகள் ஜோராக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், சூர்யா போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் கங்குவா பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் 38 மொழிகளில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. எனவே கங்குவா படத்தில் நடித்த சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இயக்குனர், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் உள்ளிட்ட அனைவரும் பட புரமோசனின் போது பல புதிய தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

11,500 ஸ்கிரீன்களில் ரிலீசாகும் கங்குவா!- ஞானவேல்ராஜா

அந்த வகையில், சமீபத்தில் கங்குவா பட புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்று இப்படம் ரூ.2000 கோடி வசூல் குவிக்கும் என்று கூறியிருந்த நிலையில், இன்னொரு புரமோசன் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் 11,500 ஸ்கிரீன்களில் ரிலீஸாகிறது என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ”கங்குவா படம் கிட்டத்தட்ட 10,500 முதல் 11,500 ஸ்கிரீன்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படம் ஏன் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் வரவில்லை என கேட்கிறார்கள். வந்திருந்தால், இப்படத்துக்கு 4000 ஸ்கிரீன்கள் வரைதான் கிடைத்திருக்கும். இப்போது இந்த டேட்டை லாக் செய்தது அதிக ஸ்கிரீன்கள் கிடைத்துள்ளது என்பது நான் படத்தை சோலோவாக ரிலீஸ் செய்வதால்தான்.

ஒரு பெரிய பான் இந்தியா படத்துக்கு இருக்கும் ஓபனிங் வட இந்தியாவில் இப்போது கங்குவா படத்துக்கு உருவாகியுள்ளது. மிகப்பெரிய ஓபனிங் டபுள் டிஜிட் ஓபனிங் எதிர்பார்த்திருக்கிறோம். தமிழகம், கேரளா, ஓவர் சீசில் என்ன கிரேஸ் இப்படத்துக்கு இருக்கிறதோ அதேயளவு கிரேஸும், மிகப்பெரிய டிக்கெட் புக்கிங் ஆந்திராவில் இப்படத்துக்கு நடந்து வருகிறது.

எங்கபோய் முடியப் போகிறதோ?- நெட்டிசன்கள்

ஒரு பெரிய ஜம்ப் கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் என ரசிகர்கள், பத்திரிக்கையாளர், நண்பர்கள் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர், லியோ, தி கோட், வேட்டையன் உள்ளிட்ட படங்கள் ஓவர் ஹைப் ஏற்றிவிட்டு சொல்லிக்கொள்ளும்படியான வசூல் செய்யவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றானர். இந்த நிலையில், கங்குவா படத்துக்கு பார்க்கும் இடமெல்லாம் ’ஓவர் ஹைப்பை ஏற்றிவிடுவது எங்கபோய் முடியப் போகிறதோ’ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News