திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

சென்னையில் கொரோனோ விதிமுறைகளை மீறிய திரையரங்குகள் மீது வழக்குப்பதிவு! தியேட்டர் லிஸ்ட் உள்ளே

கொரோனோ நோய் தொற்றினால் ஆறு மாதத்திற்கு மேலாக மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள் மீண்டும் திறக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் யாரும் திரையரங்குகளுக்கு செல்ல தயாராகவில்லை. ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், டிக்கெட்டுக்கு பாப்கான் இலவசம் என திரையரங்குகளில் கூவி கூவி அழைத்தாலும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்க்காததால் கவலையடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், தற்போது குதூகலத்தில் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.

ஏனென்றால், தமிழ் சினிமா ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த  தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி, ரசிகர்களைத் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்தது.

இந்த சமயத்தை சாதகமாக்கிய திரையரங்கு உரிமையாளர்கள், 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று விதிகளை மீறி 100 சதவீத இருக்கைகளை நிரப்பி தமிழக அரசின் விதிகளை மீறி உள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள காசி, ராதா, ருக்மணி போன்ற பிரபலமான 11 திரையரங்குகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒரு சில திரையரங்குகளில் இருமடங்கு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் தற்போது சினிமா ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது.

theater-cinemapettai

எனவே மாஸ்டர் படத்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் திரையரங்கு உரிமையாளர்களால் தளபதி ரசிகர்களின் பாக்கெட் காலி ஆகி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -spot_img

Trending News