தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து நடிப்பில் ஜாம்பவானான செவாலியர் சிவாஜி கணேசன், திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெருமையுடன் அழைக்கப்படுவார். தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், கம்பீரமான குரலும் சிவாஜி கணேசன் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார்.
மேலும் சிவாஜியின் நடிப்பு, மற்ற நடிகர்களை விட தனித்துவம் மிகுந்ததாகவும் அவருடைய உடல் மொழி மட்டுமன்றி அவரது கண், புருவம், நெற்றி, மூக்கு, கன்னம், உதடு என அனைத்துமே நடிக்கும். இப்படி சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்த சிவாஜியின் நடிப்பில் எழுபதுகளில் வெளியான சில படங்களின் கதைகளை சரியான தேர்வு செய்ய முடியாமல் திணறினார்.
அதன் காரணமாகவே தொடர்ந்து இவர் நடித்த 11 படங்கள் பிளாப் ஆனது. என்னதான் பிரமாதமாக நடித்தாலும் கதை ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே திரையரங்கில் சரியான ஓடும். அந்த வகையில் சிவாஜி நடிப்பில் வெளியான தியாகம், தீபம், உத்தமன் என அந்த சமயத்தில் வெளியான தொடர் 11 படங்கள் சிவாஜியின் ப்ளாப் படங்கள் ஆனது.
ஆனால் அதற்கெல்லாம் துளிக்கூட கவலைப்படாத சிவாஜி, தன்னுடைய நடிப்பின் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையினால் அதன் பிறகு சரியான கதை களம் கொண்ட படங்களை தேர்வு செய்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த சிவாஜிக்கு, கே விஜயன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான திரிசூலம் படம் தான் மெகா ஹிட்டடித்தது. இந்த படம் 1973 இல் வெளியான எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
இந்த படம் சிவாஜியின் 200-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும், அனுபவம் தான் முதல் ஆசான் என்பது சரியானது. எப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்ய வேண்டும், எப்படிப்பட்ட படங்களில் எல்லாம் நடிக்க கூடாது என்பதை சிவாஜி, சினிமாவில் 11 படங்களின் தொடர் தோல்வியின் மூலம் தெரிந்து கொண்டார்.
