புதன்கிழமை, ஜனவரி 15, 2025

110 டிகிரியை வீசிய மஞ்சுமால் பாய்ஸ் ஃபீவர்.. சனி, ஞாயிறு மட்டும் தமிழ்நாட்டில் இவ்வளவு காட்சிகளா?

Manjumal Boys: சமீபத்தில் வெளியாகி வந்த படங்களில் பெரிய நடிகர்களின் படங்களை விட சின்ன பட்ஜெட்டில் புதுமுக ஹீரோக்கள் மற்றும் இளம் நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு காரணம் அவருடைய வித்தியாசமான நடிப்பும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதையும் மக்களுக்கு பிடித்து போனதால் தான்.

அந்த வகையில் மலையாள மொழி படமான மஞ்சுமல் பாய்ஸ் ஆஹோ ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்துட்டு வந்தவர்கள் ஒரு சின்ன நெகட்டிவ் கருத்து கூட சொல்ல முடியாத அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

அத்துடன் அவர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்கும் பொழுது இப்படத்தை பார்க்காதவர்கள் கூட பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசையை தூண்டி இழுக்கிறது. அப்படிப்பட்ட இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு உண்மையான சம்பவத்தை எடுத்து சொல்லும் விதமாக இருக்கிறது. அதாவது கமல் நடிப்பில் 30 வருடங்களுக்கு முன் வெளிவந்த குணா படம் அப்பொழுது பெருசாக வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

Also read: எப்படி இருந்த மஞ்சுமா, இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

ஆனால் இப்பொழுது இப்படத்தின் கதை ஒரு சாதனை படமாக பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட இப்படத்தில் குணா குகையில் சிக்கிக்கொண்ட 11 நபர்களின் பற்றியே கதை தான் மஞ்சுமல் பாய்ஸ். தற்போது இப்படம் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள மக்களும் பாராட்டி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 900 காட்சிகள் ஓடி உள்ளது.

இதனால் இப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் தயாரிப்பாளர் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தற்போது வரை 60 கோடி வசூலை அடைந்திருக்கிறது. முக்கியமாக இன்னும் பல திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டு வருவதால் இன்னும் 20 கோடியும் தாண்டும் என்று எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் இப்படம் அனைத்து இடங்களிலும் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த அளவுக்கு ஒரு வரவேற்பை எதிர்பார்க்காத மொத்த படக் குழுவும் இப்பொழுது சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் கமல் தான் என்று அவருக்கும் மிகப்பெரிய பாராட்டை தெரிவித்திருக்கிறார்கள்.

Also read: கமல் போட்ட விதை, மின்னல் வேகத்தில் வசூல் சாதனை.. மஞ்சுமல் பாய்ஸ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Trending News