புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த வாரம் ஓடிடியை படையெடுக்கும் 12 படங்கள்.. தியேட்டரையே அதகளம் செய்த மார்க் ஆண்டனி

October 13 OTT Release Movies: ஒவ்வொரு வாரமும் திரையரங்கை விட ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 13 மட்டுமே கிட்டதட்ட 12 படங்கள் வெளியாகிறது. ஆகையால் ஓடிடி பிரியர்களுக்கு இந்த வாரம் செம வேட்டையாக அமைய இருக்கிறது. அவ்வாறு என்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரையரங்குகளில் பட்டையை கிளப்பிய படம் மார்க் ஆண்டனி. எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் காம்போவில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்து இருந்தனர். தியேட்டரில் இந்த படத்தை பார்க்கத் தவறியவர்கள் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான் பிரைமில் கண்டு களியுங்கள்.

பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் உருவான மாதகம் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்தில் தெலுங்கில் உருவான த கிரேட் இந்தியன் சூசைட் படம் வெளியாகிற. இதே தளத்தில் மட்டிகத தெலுங்கு படமும் வெளியாகிறது.

மேலும் ஜீ5 ஓடிடி தளத்தில் ப்ரேமவிமனம் என்ற படம் வெளியாகிறது. மிஸ்டர் நாகபூஷனம் ஈடிவி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்த வாரம் ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் தி பரியல் வெளியாகிறது. அதேபோல் நெட்பிளிக்ஸில் யூசர் என்ற படம் வெளியாகிறது. பாலிவுட்டை பொருத்தவரையில் ஹாப் லவ், ஹாப் அரேன்ச்டு என்ற படம் மட்டும் தான் வெளியாகிறது.

மேலும் இப்போது பெரும்பாலான ரசிகர்கள் கொரியன் படங்களை பார்த்து வரும் நிலையில் இந்த வாரம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஃபான்டோம் என்ற படம் வெளியாகிறது. அதேபோல் ஸ்வீடன் மொழியில் தி கான்ப்ரன்ஸ் வெளியாக இருக்கிறது. இந்த வாரம் படங்கள் நிரம்பி வழிய இருக்கிறது. தியேட்டரில் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த வாரம் வெளியாகவில்லை.

கடந்த வாரம் விஜய் ஆண்டனியின் ரத்தம், திரிஷாவின் தி ரோட் படங்கள் வெளியான நிலையில் நாளைய தினம் குண்டான் சட்டி, புது வேதம் மற்றும் மயிலாஞ்சி போன்ற சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகிறது. மேலும் அடுத்த வாரம் தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லியோ படம் திரையரங்கை அலங்கரிக்க வருகிறது.

Trending News