12 Tamil Movie Selected For International Film Festival: சினிமா துறையில் ஒவ்வொரு வருடமும் வெளியாக கூடிய மொத்த படங்களில் எந்த படம் கருத்துள்ளதாகவும், தரமான படமாகவும் இருக்கிறதோ அந்த படத்தை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். அப்படி 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா வருகிற டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதாவது ஒட்டுமொத்த இந்தியாவிலும் எந்த படங்கள் பெஸ்ட் ஆக இருக்கிறதோ, அதை கணிப்பின்படி தேர்வு செய்வார்கள். அப்படி இந்த முறை தேர்வாண மொத்த படங்கள் 150 க்கும் மேலாக இருக்கிறது. இதில் தமிழில் எந்த படங்கள் தேர்வாகி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் கிட்டத்தட்ட 12 படங்கள் தமிழில் தேர்வாகியிருக்கிறது.
அதில் முதலாளிகளால், உழைக்கும் வர்க்கத்தின் மீது இழைக்கப்படும் அநீதியை மையமாகக் கொண்டு வெளிவந்த அநீதி திரைப்படம். இப்படத்தை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார். அடுத்ததாக மதங்களைக் கடந்து மனிதாபமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்த அயோத்தி திரைப்படம். இப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியிருக்கிறார்.
அடுத்ததாக தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த கருமேகங்கள் கலைகின்றன. இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்த போர் தொழில் படம். அடுத்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வந்த ராவணக் கூட்டம், அணில் இயக்கத்தில் வெளிவந்த சாயவானம், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த செம்பி, அடுத்து சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் வெளிவந்த ஷார்ட் கேமரா ஆக்சன் திரைப்படங்களும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த படங்களை தொடர்ந்து கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த உடன் பால், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் முதல் பாகம் மற்றும் அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்த விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 போன்ற படங்களும் தேர்வாகி இருக்கிறது. இப்படி தமிழில் 12 படங்கள் தேர்வானது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த படங்களில் யார் படம் ஜெயிக்கும் என்றால் கண்டிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படம் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
21வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள 12 தமிழ் படங்களின் லிஸ்ட்