வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திருநங்கைகளையும் விட்டு வைக்க மாட்டார்.. 120 பெண்கள் வைத்த புகார், சேரன் இப்படிப்பட்டவரா.?

Director Cheran: ஃபீல் குட் படங்கள் என்றாலே வெகுசில இயக்குனர்கள் தான் நம் நினைவுக்கு வருவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் தான் சேரன். உணர்வு பூர்வமான பல படைப்புகளை கொடுத்த இவர் மீது 120 பெண்கள் குற்றம் சொல்லி இருக்கிறார்கள் என்ற விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது.

பாடகியும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சுசித்ரா தற்போது ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். அதாவது மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டார் என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அது உண்மை இல்லை என ஒரு குறும்படம் போட்டு கமல் அவரை நோஸ்கட் செய்தார்.

அது பற்றி கூறியிருக்கும் சுசித்ரா நான் அந்த வீடியோவை நிறைய முறை ஜூம் செய்து பார்த்தேன். அதில் சேரன் தவறாக தொடுவது தெரிந்தது. ஆனால் அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அப்படியே மாற்றிவிட்டார். உண்மையில் சேரன் தப்பா தொடுவார் என்று 120 பெண்கள் கூறி இருக்கின்றனர்.

Also read: வா வா ப்ரோமோ பொறுக்கி.. யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு, பத்த வச்சு குளிர் காயும் பிக்பாஸ்

அது மட்டுமல்லாமல் திருநங்கைகள் கூட அவரைப் பற்றி கூறியிருக்கின்றனர் என சுசித்ரா கூறியுள்ளார். மேலும் மீரா மிதுன் எப்போதும் தேவையில்லாமல் ஒரு ஆண் என்னை தவறாக தொடுகிறார் என கூற மாட்டார். அப்படி இருக்கும்போது சேரன் விஷயத்தில் அவர் சொன்னது உண்மை தான்.

ஆனால் பிக்பாஸ் டீம் மற்றும் கமல் சேர்ந்து அப்படியே அதை மாற்றி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தான் இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சேரன் திரைத்துறையில் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் மிக்க மனிதராக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி இருக்கும்போது சுசித்ரா கூறி இருக்கும் இந்த விஷயம் நிச்சயம் சர்ச்சை தான். இதற்கு சேரன் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்ற ஆர்வமும் இப்போது ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சுசித்ரா இப்படி தைரியமாக பேசுவது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Also read: லட்டுல ஆப்பு வைத்த பிக்பாஸ்.. விச்சுவுக்கு பொங்கல் வைக்க பிளான் போடும் Bully Gang

Trending News