வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

14 வருடங்கள் ஆகியும் தீராத பகை.. அவமானப்படுத்தியரிடமே அடைக்கலமா என வெளுத்து வாங்கிய அஜித்

Actor Ajith: இயக்குனர் மாற்றம், ஐடி ரைட், கதையில் குளறுபடி என ஏகப்பட்ட பிரச்சனைகள் சிக்கி தவிக்கும் விடாமுயற்சி படத்திற்கு இப்போது பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அதற்காக விடாமுயற்சி படத்திற்காக இப்பொழுது லைக்கா ஒரு பெரும் புள்ளியிடம் உதவி கேட்டு இருக்கிறது.

ஏற்கனவே அந்த பெரும் புள்ளிக்கும் அஜித்திற்கும் சுமார் 14 வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் அது தெரிந்தும் லைக்கா அவரிடமே அடைக்கலம் தேடி இருப்பதால் காண்டான அஜித் போன் போட்டு வெளுத்து வாங்கி விட்டார். அஜித்தின் போன படங்களில் அந்த பெரும் புள்ளி தயாரிப்பு பணிகளில் மறைமுகமாக உதவியது.

Also Read: விடாமுயற்சியின் வில்லன் லிஸ்டில் இருக்கும் 5 நடிகர்கள்.. சிங்கத்தோட மோத சிறுத்தையை தேடும் மகிழ்

அது அஜித்துக்கு பிடிக்கவில்லை, நான் எதிலையும் தலையிட மாட்டேன் உங்கள் விருப்பம் என விலகியே இருந்தார். இப்பொழுது விடாமுயற்சிக்கும் அந்த பெரும் புள்ளி உதவி செய்கிறார். முன்பு மறைமுகமாக நடந்தது, இப்போது வெளிப்படையாகவே அஜித்தின் படத்திற்கு முன்வந்து உதவி செய்வது அவரை காண்டேற்றி இருக்கிறது.

இதை அஜித், அவமானம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கிறார். லைக்காவிற்கு மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் விடாமுயற்சி படத்திற்கு பைனான்ஸ் விஷயத்தில் உதவுகிறார். ஏனென்றால் லைக்கா நிறுவனத்தில் நடந்ததால்  பணம் முடக்கப்பட்டிருக்கிறது.

Also Read: ஆஸ்கருக்கு தயாராகும் அஜித்.. யாரும் எதிர்பார்க்காத புது அவதாரம் எடுக்கும் ஏ கே

இதனால் படப்பிடிப்பு தாமதமாக கூடாது என அன்பு செழியினை வைத்து படத்தை துவங்கி விடலாம் என்று லைக்கா திட்டமிட்டு அவருடைய உதவியை நாடி இருக்கிறது. ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் படத்தின் பிரச்சினையில் இயக்குனர் பாலா அன்பு செழியினை வைத்து அஜித்திடம் பஞ்சாயத்து பேசினார்.

அப்பொழுது இருந்து அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்து வந்தது. அது இப்போது வரை தீராமல் புகைந்து கொண்டு இருக்கிறது. 14 வருடத்திற்கு முன்பு அவமானப்படுத்திய அன்புச்செழியன், தன்னுடைய படத்திற்கு உதவி செய்யும் அவசியம் இல்லை என்று லைக்கா நிறுவனத்திற்கு கடைசி கடைசியாக ஒருமுறை அஜித் வார்னிங் கொடுத்திருக்கிறார்.

Also Read: அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கமல்.. வித்யாசமான கதையில் உருவாகும் 233வது படம்

Trending News