செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த 15 பிரபலங்கள்.. உயிர் நண்பனை பிரிந்து தவிக்கும் ரஜினி

15 Actors Tributed by Vijayakanth: கருப்பு எம்ஜிஆர் என மக்களிடம் பெயர் எடுத்த கேப்டன் விஜயகாந்த் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மரண செய்தியை கேட்டதும் திரை பிரபலங்கள் மட்டுமல்ல அவருடைய தொண்டர்களும் ரசிகர்களும் ஆடிப் போனார்கள். சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கேப்டன் இன்னும் கொஞ்சம் காலம் நம்மோடு இருப்பார் என்று நினைத்தனர்.

ஆனால் இவ்வளவு சீக்கிரம் போயிட்டீங்களே! என்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். கேப்டனை கடைசி கடைசியாக பார்த்துவிட்டு, அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு 15 முக்கியமான பிரபலங்கள் எங்கிருந்தோவெல்லாம் இருந்து ஓடோடி வந்து விட்டனர். இதற்கு காரணம் கேப்டன் உடன் யாரு பழகினாலும் அவருடைய அன்பிற்கு அடிமையாகி விடுவார்கள்.

விஜயகாந்த் டாப் நடிகராக இருந்த சமயத்தில் அவருடைய போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்ட ரஜினி, கமல், சத்யராஜ் மூவரும் கண்ணீருடன் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர். ரஜினி நாகர்கோயிலில் வேட்டையன் படப்பிடிப்பில் நேற்று இருந்திருக்கிறார், அதனால் தான் உடனடியாக வர முடியவில்லை. இன்று படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தன்னுடைய ஆருயிர் நண்பனை பார்க்க ஓடி வந்துவிட்டார்.

Also Read: விஜயகாந்துக்கு இறுதி மரியாதையை செலுத்த வராத 5 நடிகர்கள்.. ஒரே ஊர்ல இருந்துட்டு எட்டிப் பார்க்காத துரோகி

விஜயகாந்த்-க்கு அஞ்சலி செலுத்திய 15 பிரபலங்கள்

அவரை தொடர்ந்து திரை உலகில் கேப்டனால் வளர்த்து விடப்பட்ட விஜய், விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார். இவர்களைத் தொடர்ந்து அர்ஜுன், பார்த்திபன், மன்சூர் அலிகான், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கேப்டனுக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார்.

இவர்களுடன் ராமராஜன், பாண்டியராஜன், ராம்கி, பிரபு, ரமணா, கௌதமி, டி ராஜேந்தர் உள்ளிட்ட பிரபலங்களும் விஜயகாந்த்தை கடைசி கடைசியாக கண்ணீருடன் பார்த்துவிட்டு சென்றனர். ‘ஆண்டாண்டு காலங்கள் அழுதாலும் மாண்டவர்கள் திரும்பி வருவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், விஜயகாந்த் போன்ற நல்ல மனிதர் இவ்வுலகை விட்டு சென்றது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பு தான்.

Also Read: கேப்டன் திரையில் மறைந்து அழ வைத்த 5 படங்கள்.. தூக்குமேடையை புன்னகையோடு ஏற்று கொண்ட ரமணா

Trending News