திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமீபத்தில் OTT-யிலும் கல்லா கட்டிய 15 படங்கள்.. முழு படத்தை பார்க்க கிளிக் செய்யவும்

திரையரங்குகளில் படம் பார்ப்பதை விட ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பெரும்பாலான படங்கள் சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்தவகையில் கடந்த சில மாதங்களில் ஒடிடியில் வெளியான சிறந்த 15 படங்கள் தற்போது பார்க்கலாம்.

காடவர் : அமலாபால், தயாரித்து நடித்திருக்கும் படம் காடவர். படத்தில் போலீஸ் சர்ஜனாக நடித்துள்ளார். தமிழ்சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு காடவர் படத்தின் மூலம் அமலாபால் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

எமோஜி : மஹத், தீபிகா சதீஸ்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் எமோஜி. எல்லா உணர்ச்சிகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் நேற்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது

தமிழ் ராக்கர்ஸ் : அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன், வாணிபோஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியானது.

தேஜாவு : அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி, மது மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேஜாவு. கடத்தல் தொடர்புடைய நிகழ்வுகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகி இருந்தது.

ஜிவி 2 : விஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி மற்றும் கருணாகரன் நடிப்பில் வெளியாகியுள்ளது ஜிவி படத்தின் இரண்டாம் பாகம். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.

விக்டிம் : வெங்கட் பிரபு, பா ரஞ்சித், எம் ராஜேஷ், சிம்புதேவன் போன்ற முன்னணி இயக்குனர்களால் இயக்கப்பட்ட 4 படங்களின் தொகுப்பு இது. இப்படத்தில் அமலாபால், பிரியா பவானி சங்க, பிரசன்னா, நாசர், தம்பி ராமையா, நட்ராஜ் போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் ஆகஸ்ட் 5 சோனி லைவில் வெளியானது.

மகா : அறிமுக இயக்குனர் யுஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா, சிம்பு நடிப்பில் க்ரைம் த்ரில்லராக வெளியானது. இப்படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஆகஸ்ட் 5 ஆஹா தமிழ் என்ற ஓடிடியில் வெளியானது.

D பிளாக் : விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, கரு பழனியப்பன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டி பிளாக். இப்படம் அடர்ந்த காடுகளுக்கு அருகில் உள்ள கல்லூரியில் நடக்கும் மர்மமான கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் ஆகஸ்டு 1ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

வட்டம் : கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் படம் வட்டம். இப்படத்தில் ஒரு இளைஞன் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்க முயலும் போது சிக்கலில் மாட்டுகிறார். இப்படம் ஜூலை 29-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியானது.

வீட்ல விசேஷம் : என் ஜே சரவணன் உடன் இணைந்து ஆர் ஜே பாலாஜி இயக்கிய படம் வீட்ல விசேஷம். இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூலை 15 வெளியானது.

மாமனிதன் : சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமனிதன். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜூலை 15ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

வாய்தா : மஹிவர்மன் இயக்கத்தில் நாசர், ராமசாமி, புகழ் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வாய்தா. இப்படத்தில் நீதிமன்ற வழக்கில் சிக்கிய முதியவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை சுற்றி நகர்கிறது. வாய்தா படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூலை 29-ஆம் தேதி வெளியானது.

நெஞ்சுக்கு நீதி : அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி, தன்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படம் சோனி லைவில் ஜூன் 22ஆம் தேதி வெளியானது. இப்படம் ஆர்ட்டிக்கிள் 15 என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும்.

O2 : ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, மாஸ்டர் ரித்விக் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் O2. சர்வைவல் த்ரில்லர் படமாக இப்படம் வெளியானது. மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் ஜூன் 17 வெளியாகி கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது.

கூகுள் குட்டப்பா : கேஎஸ் ரவிக்குமார், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கூகுள் குட்டப்பா. இப்படம் ஒரு ரோபோவுடன் உண்டான சிறப்பான பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் ஜூன் 3 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது.

Trending News