ஒரு படம் வெளி வரக்கூடாது வெளிவந்தால் பல பிரச்சனைகள் சந்திப்பது வாடிக்கையான விஷயம் தான். அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சென்சார் போர்டு போன்றவை மொத்தமாக வந்து போராட்ட களத்தில் நின்று விடுவார்கள்.
அப்போது மிகவும் பிரபலமாக இருந்த டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரான ஆர் கே செல்வமணியின் படம் தான் அது. ராம்கி மற்றும் ரஹ்மான் போன்றவர்கள் நடிப்பில் பூஜை போட்டவுடன் என்ற படம்.
அந்த படத்தின் பெயர்தான் குற்றப்பத்திரிக்கை அதாவதுயின் கொலை வழக்கை பேஸ் பண்ணி எடுத்த படம்.
இந்த படத்தில் அவரது குண்டுவெடிப்பு காட்சி, இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பல காட்சிகள் இருக்கும் என சென்சார்போர்டு ரிலீஸ் பண்ண முடியாது என கூறி விட்டது.
அப்போது ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இந்த படம் ரிலீஸ் செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து தடை போட்டது.
கிட்டத்தட்ட 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் 15 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு ரிலீசானது, வெளிவந்த இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.