வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

15 வருட பகையை குத்தி கிளறும் சிவக்குமார் குடும்ப நெருங்கிய உறவு.. வெளுத்துப் போன அமீரின் சாயம்

Ameer-Sivakumar: பருத்திவீரன் கொடுத்த அடையாளம் தான் கார்த்தி 25 படங்கள் வரை நடிப்பதற்கு உதவியாக இருந்தது. ஆனால் அதுவே இப்போது பெரும் பஞ்சாயத்தாக மாறி இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜப்பான் இசை வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் வந்திருந்தனர். ஆனால் அமீருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற சர்ச்சை கிளம்பியது.

அதைத்தொடர்ந்து இப்போது அமீரின் பேட்டி தான் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் சிவகுமார் குடும்பத்திற்கும் எனக்கும் இருந்த உறவை கெடுத்து விட்டார் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார். அது மட்டுமின்றி பருத்திவீரன் படத்தால் தனக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்றும் கூறியிருந்தார்.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் ஞானவேல் ராஜா அமீரை பற்றிய பல விஷயங்களை தெரிவித்துள்ளார். அதிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சனையை அவர் வெட்ட வெளிச்சமாக்கி இருப்பது இந்த பிரச்சனையை இன்னும் சூடு பிடிக்க வைத்துள்ளது. அவர் கூறியிருப்பதாவது, அமீர் தன்னுடைய கடன் பிரச்சனையை தீர்க்க தான் பருத்திவீரனை இயக்க முன் வந்தார்.

Also read: தீபாவளி ரேசில் சரவெடி யார்.? ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 3வது நாள் வசூல்

அதிலும் இரண்டு கோடியில் படத்தை முடிப்பதாக கூறிவிட்டு 4 கோடி வரை இழுத்து விட்டார். அந்த பணத்தில் நான்கு படங்களை எடுத்து இருக்கலாம். இதில் ஒரு காட்சியில் வெறும் 15 பன்றிகளை மட்டும் நடிக்க வைத்துவிட்டு 200 என கணக்கு காட்டினார். இதேபோன்று வேறு சில தயாரிப்பாளர்களும் அவரால் பாதிக்கப்பட்டனர்.

நாங்கள் ஒன்று சேர்ந்து பேட்டி கொடுக்க தயார் என்று சவால் விடும் வகையில் பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் அமீர் தன்னை ஏதோ பாரதிராஜா போல் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது. இனிமேலும் அவர் இதுபோன்று பேசி வந்தால் நானும் பல விஷயங்களை சொல்ல நேரிடும் என அவர் கொந்தளித்துள்ளார்.

ஆக மொத்தம் இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவது ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் 15 வருட பகையை ஞானவேல் ராஜா தற்போது கிளறி இருப்பது சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க அமீர் சம்மதித்திருப்பது தான் இதற்கு காரணமா என்றும் பேசப்பட்டு வருகிறது.

Also read: 25 படங்கள் நடித்தும் கார்த்திக்கு குறையாத குசும்பு.. கூடவே தொத்திக்கிட்ட அடைமொழி

Trending News