எல்லா நடிகர்களும் இந்த நடிகர் மீது தீராத ஆசை உடன் இருப்பார்கள். ஏனென்றால் அவ்வளவு அழகும், திறமையும் உள்ள நடிகர். அவருடைய ஒரு படத்தில் நடித்தால் போதும் என்பது பல முன்னணி நடிகர்களின் கனவாக கூட இருந்திருக்கிறது. அப்படி அந்த நடிகருடன் இரண்டு, மூன்று படங்களில் ஒரு நடிகை ஜோடி போட்டு நடித்தார்.
அப்போதே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தாலும் ஏதோ சில காரணங்களினால் இருவருமே வேறு திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஆனால் அது சில வருடங்களிலேயே பொய்த்து போய்விட்டது. ஆனால் மீண்டும் இவர்கள் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Also read: சின்ன கேரக்டர் மூலம் சிகரம் தொட்ட சித்தார்த்.. 14 ஆண்டுகளில் நடிகராக அடையாளப்படுத்திய 6 படங்கள்
தற்சமயத்தில் பழைய காதல் மீண்டும் மலர இவர்கள் ஒன்றாகவே வாழலாம் என்ற முடிவை எடுத்தனர். அதன்படி கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தார்கள். ஆனால் திடீரென அந்த நடிகை நடிகர் மீது குற்றச்சாட்டு சொல்லி அவரை விட்டு பிரிந்து விட்டார்.
அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் நடிகரை பிரிந்ததற்கான காரணத்தை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது 15 வருடங்களாக தன்னுடைய சம்பாத்தியத்தை அந்த நடிகர் சுரண்டியதாகவும், நம்ப வைத்து கழுத்தை அறுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இப்போது அந்த நடிகர் நிறைய சம்பாதித்து வருகிறார். ஆனால் நானோ நிர்க்கதியாக இருக்கிறேன். மேலும் பதினைந்து வருடங்கள் அவருக்கு உண்மையாக இருந்த என்னையை ஏமாற்றிவிட்டார் என்ற போது யாருக்கு தான் அவர் உண்மையாக இருப்பார் என்று புலம்பித் தவித்துள்ளார் நடிகை.
Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்