வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Arulnithi: 16000 கோடிகளை முதலீடு செய்து ரெட் ஜெயண்ட்க்கு ஆப் அடிக்கப் போகும் நிறுவனம்.. வளர்ந்து வரும் 4 ஹீரோக்கள் விரிக்கும் வலை!

16000 Crores is a growing production company competing with Red Giant Movies: பெரும்பாலான சினிமா ரசிகர்கள் திரையில் பிரம்மாண்டத்தையே காண ஆர்வம் காட்டுகின்றனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டுக்கும் பஞ்சமில்லை, நடிக்கும் நாயகர்களுக்கும் பஞ்சமில்லை என்பது போல்,

தற்போது பெரிய நிறுவனம் ஒன்று கோலிவுட்டில் 16000 கோடி முதலிடு செய்ய உள்ளது. வளர்ந்து வரும் நடிகர்கள் பலரும், இந்நிறுவனத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்

பி டி ஜி யுனிவர்சல் என்கின்ற பெரிய சேவை நிறுவனம், தமிழ் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனத்தில் கதை கேட்பதற்காகவே பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கணினியுடன் அமர்ந்து உள்ளனராம்.

நல்ல தரமான கதையுடன் வரும் இயக்குனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது தகவல்.  

ஏற்கனவே இந்த நிறுவனம் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட முறையில் தயாரித்து உள்ளது.

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2, படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் செப்டம்பர் மாதம் இதனை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

பி டி ஜி யுனிவர்சல் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல

தற்போது மான்கராத்தே இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல என்கின்ற பிரம்மாண்ட பட்ஜெட் ஆக்சன் திரைப்படத்தை தயாரித்து வருகிறது இந்நிறுவனம். 

“ரெட்ட தல” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டின் போது பேசிய தயாரிப்பாளர் பாபி அவர்கள், ரசிகர்களுக்கு நல்லதரமானபடைப்புகள் வழங்க வேண்டும் என்பதில் வெகு கவனமாக உள்ளோம் என்ற கருத்தை முன் வைத்தார்.

300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சிறந்த சேவைகளை அளித்து வரும் எங்கள் நிறுவனம், ஹாலிவுட் தரத்திற்கு கோலிவுட்டில் படங்கள் கொடுக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இருக்கிறோம் என்றார்.

மேலும் இந்நிறுவனம்  நடிகர் வைபவ் வைத்து ஒரு படமும், எஸ் ஜே சூர்யாவை வைத்து ஒரு படமும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

ஏழு பிரம்மாண்ட படங்கள் தயாரித்து வரும் இந்நிறுவனம், இவை தவிர மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பான் இந்தியா மூவி தயாரிக்கவும் முடிவு செய்து உள்ளனர். 

ஆக மொத்தம் தமிழ் திரைத்துறையில் கோலோச்சி வரும் முன்னணி நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு போட்டியாக வளர்ந்து வருகிறது இந்த பி டி ஜி  நிறுவனம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

- Advertisement -spot_img

Trending News