திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லிங்குசாமியை கவுத்திய 17 வயது நடிகை.. அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்துட்டாராமே!

மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க கிளம்பியிருக்கும் லிங்குசாமி படத்தில் 17 வயது நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் உள்ள மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் சண்டக்கோழி 2. எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றியை பெறாததால் கடந்த சில வருடங்களாக மாஸ் கதையை எழுத நேரம் எடுத்துக் கொண்டாராம்.

அந்த வகையில் தற்போது மரண மாஸ் படத்தை விரைவில் இயக்க உள்ளார். அந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ராம் போத்தினி என்பவர் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் 17 வயதான கீர்த்தி ஷெட்டி என்பவர் நடிக்க உள்ளாராம். கீர்த்தி ஷெட்டி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மூன்று நாட்களில் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் உப்பண்ணா.

விஜய் சேதுபதி உப்பண்ணா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்த கீர்த்தி செட்டியின் நடிப்பு லிங்குசாமியை கவர்ந்ததால் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்து விட்டாராம்.

krithishetty-cinemapettai
krithishetty-cinemapettai

கீர்த்தி ஷெட்டி தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களின் பார்வையை ஒரே படத்தின் மூலம் தன் பக்கம் திருப்பி விட்டார். இதனால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். லிங்குசாமி படம் மட்டுமல்லாது அடுத்து ஒரு முன்னணி நடிகரின் படத்தில் சத்தமில்லாமல் ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமாம்.

Trending News