கடந்த ஆண்டு தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏனென்றால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது இந்த முடிவை தமிழக முதல்வர் எடுத்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எப்பொழுதுமே அதிமுக அரசு செவி சாய்க்கும். எனவே ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் சிறப்பான பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே தமிழகத்தில் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட 17, 686 பேர் மீதான 408 வழக்குகளை தற்போது தமிழக முதல்வர் ரத்து செய்தது மட்டுமல்லாமல்,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆணை ஏற்றவுடன் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஊதியக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து,
ஒரே மாதத்தில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஆணையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.