திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

18 வருடத்திற்கு முன் விஜய்யுடன் லோகேஷ்-க்கு நடிக்க கிடைத்த பட வாய்ப்பு.. தலைகீழாக மாற்றிய இயக்குனர்

ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் தற்போது டாப் இயக்குனர் லிஸ்டில் இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் படத்திற்கு பிறகு மறுபடியும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் இந்த படத்தை குறித்த புது புது அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் 18 வருடத்திற்கு முன் விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பு தன்னுடைய நண்பர்களுக்கு எப்படி கைமாறியது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

Also Read: கேப்டனுக்கு மட்டுமே பயப்படும் லியோ பட நடிகர்.. அடித்துப் பிடித்து ஓடவிட்ட தருணம்

2005ல் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான சச்சின் படத்தில் லோகேஷுக்கு விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து, கடைசியில் கிடைக்காமல் சென்றதை வருத்தத்துடன் கூறியிருக்கிறார். அப்போது பேச்சிலர்கள் சிலர் ஏர்போர்ட்டை சுற்றிப் பார்க்க டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்து வருவோம். அப்படி நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம்.

அந்த சமயத்தில் ஏர்போர்ட்டுக்குள்ளே தளபதி விஜய்யின் சச்சின் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடிக்க வேண்டும் என எங்களை அழைத்தார்கள். நாங்களும் விஜய் உடன் நடிக்க அழைக்கிறார்களே! என்று ஆசையுடன் சென்றோம். ஆனால் நண்பர்கள் மட்டும் போதும் ஆட்கள் கரெக்டாக இருக்கிறார்கள். நீங்கள் வேண்டாம் என்று என்னை ஒதுக்கி விட்டார்கள்.

Also Read: புது அவதாரம் எடுக்கும் விஷால்.. தளபதி விஜய்யின் கைராசியால் வந்த விடிவுகாலம்

அது ஒரு சின்ன அவமானம் தான். இருந்தாலும் அவர் கூட நடிக்க முடியவில்லை என்ற வருத்தம். கடைசியில் விஜய் நடித்ததை நன்றாக வேடிக்கை பார்த்து, படப்பிடிப்பு முடிந்து நாங்கள் அனைவரும் வெளியில் வந்தோம். சமீபத்தில் ஒரு பேட்டியில் இதை அவர் பகிர்ந்து இருக்கிறார். விஜய் வைத்து லியோ படத்தை தற்போது மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார். இந்தியாவின் மிக முக்கியமான டைரக்டராகவும் இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால் 18 வருடத்திற்கு முன்பு விஜய்யுடன் நடிக்க வேண்டாம் என ஒதுக்கப்பட்ட லோகேஷ், இப்போது அவருடைய இமேஜை தலைகீழாக புரட்டிப் போட்டு இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் டாப் நடிகர்களும் நடிக்க வேண்டும் என்று வரிசை கட்டிக் காத்திருக்கின்றனர். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பதற்கு ஏற்ப, லோகேஷும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Also Read: விஜய்யின் தோல்வி படத்துக்கு காரணம் ரஜினி தான்.. மனம் திறந்து பேசிய கலைப்புலி எஸ் தாணு

Trending News