Shankar : கோலிவுட் இயக்குனர்கள் தங்கள் இயக்கிய கடைசி படத்தில் பிளாப் கொடுத்துள்ளனர். இதுவரை தோல்விப் படங்களை கொடுக்காத இயக்குனர்கள் கூட இந்த முறை சொதப்பி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவ்வாறு உள்ள 19 இயக்குனர்கள் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
பார்ட் 2 படங்கள் எடுத்து தோல்வியை கண்டனர் பிரம்மாண்ட இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம். அதாவது சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல் பொன்னியின் செல்வன் படம் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட நிலையில் பார்ட் 2 எதிர்பார்த்த அளவு போகவில்லை.
மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஜோஸ்வா, பாலா இயக்கிய தாரை தப்பட்டை, வர்மா போன்ற படங்களும் படுதோல்வி அடைந்தது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படமும் காலை வாரிவிட்டது.
கடைசி படம் தோல்வியை கொடுத்த 19 இயக்குனர்கள்
நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் மூலம் கடைசியாக தோல்வியை கொடுத்துள்ளார் பா. ரஞ்சித். அதேபோல் மோகன்ஜியின் பகாசுரன், செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் பி வாசுவின் சந்திரமுகி 2 படங்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
வசந்த பாலனின் அநீதி, தங்கர் பச்சனின் கார்மேகங்கள் மற்றும் பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படங்களும் தோல்வியை தழுவியது. பிருந்தா இயக்கிய ஹேய் சினாமிகா, கார்த்திக் நரேனின் மாறன் படங்களும் வெற்றியை கொடுக்கவில்லை.
அஸ்வினை வைத்து பிரபு சாலமன் எடுத்த செம்பி படமும் வேலைக்கு ஆகவில்லை. அதேபோல் இயக்குனர் சுசீந்திரனும் தொடர்ந்து நிறைய பிளாப் படங்களை கொடுத்திருக்கிறார். இப்போது உள்ள காலகட்டத்தில் ரத்த களரி உடன் உருவாகும் லோகேஷ், நெல்சன், அட்லீ போன்ற இயக்குனர்களின் படங்கள் தான் ரசிகர்களை பெரிய அளவில் கவருகிறது.
இந்தியன் 2 வில் சொதப்பிய ஷங்கர்
- ஆண்டவர் சொல்லியும் கேட்காத ஷங்கர்
- இந்தியன் 2 சொதப்பலுக்கு அரசியல் தலையீடு தான் காரணமா.? நிஜமாவே ஷங்கர் தான் இயக்குனாரா.?
- சித்தார்த்தை வைத்து ரஜினியை செஞ்சு விட்ட ஷங்கர்