செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிரபு, கார்த்திக்கு போட்டியாய் களம் இறங்கிய 2 நடிகர்கள்.. வில்லனாக தெறிக்க விடும் இயக்குனர்

Actor Prabhu-Karthik: 80- 90 கால கட்டத்தில் முன்னணி கதாநாயகனாய் வலம் வந்து எண்ணற்ற படங்களை வெற்றி பெறச் செய்தவர்கள் பிரபு மற்றும் கார்த்திக். இந்நிலையில் இவர்களை ஓரம் கட்டிய 2 நடிகர்கள் பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

நடிப்பில் இவர்கள் மேற்கொண்டு முயற்சி இவர்களுக்கு பல வெற்றி வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. அவ்வாறு புகழின் உச்சியில் இருந்த இவர்கள் தற்பொழுது சுத்தமாக நடிப்பது இல்லை. அவ்வப்போது சிறிய கதாபாத்திரங்களில் தலை காட்டி வரும் இவர்கள் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகின்றன.

Also Read: வாரிசு நடிகருக்காக சத்யராஜ் இறங்கி செய்த காரியம்.. பல வருடத்திற்கு பின்பு சம்பவம் செய்ய போகும் அம்மாவாசை

மேலும் தன்னை தேடி வரும் வாய்ப்புகளை மற்றும் ஏற்று நடித்து வருகின்றனர். இருப்பினும் தற்பொழுது இவர்களின் இடத்தினை இரு நடிகர்கள் பிடித்துள்ளனர். அவ்வாறு தன் செகண்ட் இன்னிங்ஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் சரத்குமார் தான் அது.

சின்னதம்பி பிரபுவுக்கு நிகராய் சரத்குமார் தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் தெறிக்கவிட்டு வருகிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஏற்ற நடிப்பினை வெளிக்காட்டி வருகிறார்.

Also Read: ஜெயிலரை விட லியோ தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்.. பொறாமையில் பேசிய 62 வயது சில்வர் ஜூப்ளி நடிகர்

அதேபோல் நவரச நாயகன் கார்த்திக்கின் இடத்தை எஸ் ஜே சூர்யா பிடித்திருக்கிறார். வாலி, குஷி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் தான் எஸ் ஜே சூர்யா. இயக்குவதை தவிர்த்து தற்பொழுது நடிப்பில் இறங்கி உள்ள இவர் கதாநாயகனாய் ஒரு சில படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று மாஸ் காட்டி வருகிறார். மாநாடு படத்தில் இவர் மேற்கொண்ட கதாபாத்திரம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து தன் அடுத்த கட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வாய்ப்பினை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

Trending News