திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவாஜிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் 2 நடிகர்கள்.. எந்த சந்தேகமாக இருந்தாலும் உரிமையாக பேசி தீர்த்துக் கொள்வார்

Actor Sivaji: தன்னுடைய ஆர்வத்தாலும், திறமை ஆளும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்நிலையில் இவர் சந்தேகங்களை பூர்த்தி செய்த இரண்டு நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

பராசக்தி படத்தின் மூலம் வசனத்திலும், தமிழ் உச்சரிப்பிலும் இவரை மிஞ்ச ஆளே கிடையாது என்னும் அளவிற்கு கொடிகட்டி பறந்தவர் சிவாஜி. இந்நிலையில் இவருக்கு நடிப்பில் ஆலோசனை கொடுத்தவர்தான் தங்கவேலு. மங்கையர் திலகம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

Also Read: விஜய்யின் உடன்பிறப்பாக நடித்த 5 நடிகர்கள்.. அண்ணன், தம்பியாக நடித்து தளபதிக்கு வில்லனான பிரபலங்கள்

அதிலும் உத்தமபுத்திரன் படத்தில் இவர்கள் இணைந்து கலக்கிய நகைச்சுவைக்கு அளவே இல்லை. அந்த அளவிற்கு இவர்கள் இடையே நட்பு இருந்தமையால் சிவாஜியின் சந்தேகத்தை தீர்த்த நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் தங்கவேலு.

மேலும் நடிப்பில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனே தங்கவேலுவின் வீட்டிற்கு சென்று மாமா எனக்கு இதுல சந்தேகமா இருக்கு நீ நடித்துக் காட்டு என சொல்லி கூர்ந்து கவனித்து அதனை பயன்படுத்திக் கொள்வாராம் சிவாஜி. அவ்வாறு தன் உற்ற நண்பனை போல சிவாஜி தங்கவேலுவை பார்த்துள்ளார்.

Also Read: 40 வருட திரையுலக வெற்றிக்கு தளபதி மெயின்டைன் செய்யும் 5 சீக்ரெட்.. இரண்டு தலைமுறையாக கொண்டாடப்படும் ஹீரோ

மேலும் தங்கவேலுவின் மறைவிற்கு பின்பு சிவாஜி சந்தேகங்களை கேட்க யாரும் இல்லாமல் இருந்ததால் அதன்பின் நண்பராய் மாறியவர் தான் சின்னி ஜெயந்த். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர்களில் இவரும் ஒருவர். அதைக் கொண்டே சிவாஜி இவரையும் பயன்படுத்தி இருக்கிறார்.

அவ்வாறு சிவாஜி ஏம்பா நாயுடு இந்த சீன் நீ நடிச்சா எப்படி நடிப்ப நடிச்சு காட்டு என நடிக்க சொல்லி அதை படப்பிடிப்பில் பயன்படுத்தி கொள்வாராம் சிவாஜி. இதுபோல் இவர்கள் இருவரின் ஆலோசனைகளையும் முக்கியமாக கருதி இருக்கிறார் சிவாஜி.

Also Read: அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

Trending News