Gossip: இரண்டு பெண்கள் அரை மணி நேரம் கூட ஒரு இடத்தில் அமைதியாக இருக்க முடியாது. ஏதாவது ஒரு சண்டை ஆரம்பித்து விடும். அப்படித்தான் இப்போது அந்த ரியாலிட்டி ஷோவில் களமிறங்கி இருப்பவர்கள் எல்லோருமே இளம்பெண்கள் தான்.
இது போதாதா அவர்களுக்குள் சண்டையை மூட்டி விடுவதற்கு. அதிலும் சின்ன திரையில் இருந்து பெரிய திரையில் தலை காட்டிய இரண்டு பிரபலங்களும் உள்ளே இருக்கின்றனர்.
இவர்கள் சேனலுக்கு ரொம்பவும் நெருக்கமானவர்கள் தான். அப்படி இருந்தும் கூட இருவரும் எதிரும் புதிருமாக இருப்பது பார்வையாளர்களை என்னவாக இருக்கும் என யோசிக்க வைத்திருக்கிறது.
சீனியருக்கும் ஜூனியருக்கும் நடக்கும் சண்டை
விசாரித்ததில் இரண்டு பேருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்கிறதாம். அதைத்தான் அந்த சீனியர் பிரபலம் இப்போது வெளிப்படையாக காட்டி தன் கோபத்தை தீர்த்துக் கொள்கிறார் என்கின்றனர்.
ஜூனியரும் ஒன்றும் லேசு பட்டவர் கிடையாது. நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஏகப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு தான் வந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கடந்த சீசனில் பிரபலமான ஒருவரை அப்படியே காப்பி அடிப்பதாக கூட பேசப்படுகிறது.
அதனால்தான் வந்த நாளிலேயே இரண்டு பேருக்கும் சண்டை முட்டிக்கொண்டது. இருவரும் தற்போது பின்வாங்காத நிலையில் எப்போது குடுமிபிடி சண்டை நடக்கும் டிஆர்பி உயரும் என நிகழ்ச்சி தரப்பு ஆர்வத்துடன் காத்திருக்கிறதாம்.
நீயா நானா போட்டி போடும் பிரபலங்கள்
- பட வாய்ப்புக்காக நடிகை செய்த சீக்ரெட் வேலை
- நைட் பார்ட்டியில் நடிகைக்கு கூடிய மவுசு
- அடிதடியில் முடிந்த வாக்குவாதம்